வீடு / சமையல் குறிப்பு / புரோகோலி பகோடா

Photo of Broccoli Pakora by Babitha Costa at BetterButter
2428
64
4.0(0)
6

புரோகோலி பகோடா

Jun-27-2016
Babitha Costa
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. புரோக்கோலி பூ - 1 1/2 கப்
  2. கடலை மாவு - 1 கப்
  3. அரிசி மாவு - 1 தேக்கரண்டி
  4. சிவப்பு மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
  5. பெருங்காயம் - 1 தேக்கரண்டி
  6. சமையல் சோடா மாவு - 1/4 தேக்கரண்டி
  7. சுவைக்கு உப்பு
  8. பொரிப்பதற்கு எண்ணெய்

வழிமுறைகள்

  1. புரோகோலியைச் சுத்தப்படுத்தி, பூக்களை வெட்டித் தனியாக எடுக்கவும். பூக்கள் பெரிய அளவில் இருந்தால் சிறிதாக வெட்டிக்கொள்ளவும். உப்புத் தண்ணீரில் பூவை வைக்கவும். இது உள்ளே மாட்டிக்கொண்ட அனைத்துப் பூச்சிகளையும்/வண்டுகளையும் வெளியேற்றிவிடும்.
  2. ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த் தூள், உப்பு, பெருங்காயம், சமையல் சோடா மாவு ஆகியவற்றைச் சேர்க்கவும். தண்ணீர் சேர்த்து பாதி அடர்த்தியான மாவாகச் செய்துகொள்ளவும்.
  3. பொரிப்பதற்கு எண்ணெயைச் சூடுபடுத்தி ஒவ்வொரு பூவையும் தயாரித்து வைத்துள்ள மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் விடவும். வெந்ததும், சமையல் பேப்பரில் வடிக்கட்டிக்கொள்ளவும்
  4. கெச்சப்போடு அல்லது புதினா சட்னியோடு சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்