வீடு / சமையல் குறிப்பு / புதினா சப்பாத்தி வித் செட்டிநாடு சிக்கன்

Photo of Mint Chappathi with Chettinaadu Chicken by Fathima Sujitha at BetterButter
412
2
0.0(0)
0

புதினா சப்பாத்தி வித் செட்டிநாடு சிக்கன்

Sep-22-2018
Fathima Sujitha
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

புதினா சப்பாத்தி வித் செட்டிநாடு சிக்கன் செய்முறை பற்றி

சாதாரணமாக செய்ய கூடிய சப்பாத்தியை விட இது ரொம்ப Soft ஆக இருக்கும் ...மேலும் செட்டிநாடு சிக்கன் உடன் சேர்த்து சாப்பிடும் போது ருசி அருமையாக இருக்கும்...!!

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. புதினா சப்பாத்தி தயாரிக்க: கோதுமை மாவு - 1 கப்
  2. சோள மாவு -1 கப்
  3. இஞ்சி - சிறிய துண்டு
  4. பூடு - 5 பல்
  5. புதினா - 1 கப்
  6. தயிர் - தேவையான அளவு
  7. சோம்பு - 1/2 டீஸ்பூன்
  8. எண்ணெய் - தேவையான அளவு
  9. உப்பு - தேவையான அளவு
  10. செட்டிநாடு சிக்கன் : சிக்கன் - 3/4 கிலோ
  11. வெங்காயம் - 2
  12. தக்காளி -2
  13. இஞ்சி, பூடு விழுது - 1 பூஸ்பூன்
  14. மிளகாய் - 2
  15. காய்ந்த மிளகாய் - 3
  16. மல்லி - 1 1/2 டீஸ்பூன்
  17. மிளகு - 3/4 டீஸ்பூன்
  18. சீரகம்- 1 டீஸ்பூன்
  19. சோம்பு - 1 டீஸ்பூன்
  20. கிராம்பு - 4
  21. ஏலக்காய் - 2
  22. பட்டை - 2 துண்டு
  23. தேங்காய் அரைத்த விழுது - 2 டீஸ்பூன்
  24. மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
  25. மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
  26. மல்லி தூள் - 3/4 டீஸ்பூன்
  27. கறிவேப்பில்லை, கொத்தமல்லி, புதினா - தேவைக்கு
  28. எண்ணெய் - தேவையான அளவு
  29. உப்பு - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. புதினா சப்பாத்தி : ஒரு அகலமான பாத்தித்தில் கோதுமை மாவு சோள மாவை எடுத்து கொள்ளவும்.
  2. பின் மிக்ஸியில் இஞ்சி, பூடு புதினா இலைகளை பேஸ்ட் ஆக அரைத்து எடுக்கவும்.
  3. எடுத்துக் கொண்ட மாவில் சோம்பு, தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
  4. பின் அரைத்த புதினா விழுதை சேர்க்கவும்.
  5. தேவையான அளவு தயிர் சேர்த்து பிசையவும்.
  6. முக்கியமான ஒன்று இந்த சப்பாத்திக்கு தண்ணீர் ஊற்ற கூடாது ...புதினா மற்றும் தயிர் போதுமானது.
  7. சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 2 மணி நேரம் ஊற விடவும்.
  8. செட்டிநாடு சிக்கன் : முதலில் ஒரு காய்ந்த கடாயில் கொடுக்கப்பட்டுள்ள மல்லி, மிளகு, வத்தல், சீரகம், சோம்பு, ஏலக்காய், பட்டை, கிராம்பு அனைத்தையும் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
  9. சூடு ஆறியதும் பொடியாக அரைத்து எடுத்து கொள்ளவும்..(செட்டிநாடு சிக்கன் கறிக்கு முக்கியமான மசாலா இது).
  10. குக்கரில் எண்ணெய் ஊற்றி சுடானதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  11. இஞ்சி பூடு விழுது சேர்த்து வதக்கவும்.
  12. கறிவேப்பில்லை கொத்தமல்லி புதினா மிளகாய் சேர்க்கவும்.
  13. தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
  14. வதங்கியதும், மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள், அரைத்து பொடி செய்துள்ள தூளையும் சேர்க்கவும்.
  15. உப்பு சேர்த்து கிளறவும்.
  16. சிக்கனை சேர்த்து கிளறவும்.
  17. பாதி வெந்து எண்ணெய் பிரிந்து வரும் நேரம் தேங்காய் விழுதை சேர்க்கவும்.
  18. தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்.
  19. ஒரு கொதி வந்ததும், குக்கரை மூடி 3 விசில் வரும் வரை காத்திருக்கவும்.
  20. செட்டிநாடு சிக்கன் தயார்...
  21. பிசைந்து வைத்துள்ள சப்பாத்தி மாவை சிறு உருண்டைகளாக எடுத்து பரத்தி சப்பாத்தியாக திரட்டி இருபுறமும் நெய் விட்டு சுட்டெடுக்கவும்.
  22. சுவையான புதினா சப்பாத்தி வித் செட்டிநாடு சிக்கன் ரெடி...!!

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்