வீடு / சமையல் குறிப்பு / காலையில் மீதமான சாதத்தில் ராகி இடியாப்பம்

Photo of Left over rice ragi idiyappam by poorani Kasiraj at BetterButter
490
3
0.0(0)
0

காலையில் மீதமான சாதத்தில் ராகி இடியாப்பம்

Sep-22-2018
poorani Kasiraj
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

காலையில் மீதமான சாதத்தில் ராகி இடியாப்பம் செய்முறை பற்றி

காலையில் மீதமான சாதத்தில் ராகி இடியாப்பம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சாதம் 3/4 கப்
  2. நன்கு வறுத்த ராகி மாவு- 1 கப்
  3. உப்பு
  4. நெய் 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. சாதத்தினை மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்
  2. அதனுடன் ராகி மாவை சேர்த்துக் கொள்ளவும்
  3. மாவு கெட்டியாக சப்பாத்தி மாவு பதத்திற்கு வர வேண்டும்
  4. தண்ணீர் சேர்க்க கூடாது
  5. சாதத்தில் உப்பு இருந்தால் உப்பு சேர்க்க தேவையில்லை இல்லாவிட்டால் உப்பு சிறிது சேர்த்துக் கொள்ளவும்
  6. மாவுடன் சிறிது நெய் சேர்த்து கொள்ளவும்￰
  7. குழலில் உட்புறம் நெய் தடவிக் கொள்ளவும்
  8. மாவினை குழலில் நிரப்பிக் கொள்ளவும்
  9. இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்
  10. இட்லி தட்டில் இடியாப்பத்தை பிழிந்து வைத்துக் கொள்ளவும்
  11. தண்ணீர் நன்கு கொதித்ததும் இட்லி தட்டை வைத்து மூடி போட்டு வேக விடவும்
  12. மீதமான சாதத்தில் ராகி இடியாப்பம் ரெடி
  13. தேங்காய்ப்பூ சர்க்கரை தூவி பரிமாறலாம்
  14. காய்கறிகளை வெட்டி போட்டு தாளித்தும் பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்