வீடு / சமையல் குறிப்பு / பீட்ரூட் இடியாப்பம் மற்றும் முள்ளங்கி குருமா

Photo of Beetroot idiyappam and radish kuruma by jeyaveni chinniah at BetterButter
511
3
0.0(0)
0

பீட்ரூட் இடியாப்பம் மற்றும் முள்ளங்கி குருமா

Sep-22-2018
jeyaveni chinniah
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பீட்ரூட் இடியாப்பம் மற்றும் முள்ளங்கி குருமா செய்முறை பற்றி

பீட்ரூட்டின் சத்தை குழந்தைகள் விரும்பி உண்ண சத்தான மற்றும் சுவையான உணவு.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. இடியாப்பம் மாவு-200
  2. பீட்ரூட் சாறு-1/2 கப்
  3. தேங்காய் எண்ணெய்-1 ஸ்பூன்
  4. உப்பு தேவையான அளவு
  5. முள்ளங்கி குருமா:
  6. முள்ளங்கி-1
  7. தேங்காய்-சிறிதளவு
  8. பெருஞ்சீரகம்-1 ஸ்பூன்
  9. முந்திரி பருப்பு-3
  10. மஞ்சள் தூள்-1/4 ஸ்பூன்
  11. மிளகாய்த்தூள்-1 ஸ்பூன்
  12. மல்லி தூள்-2 ஸ்பூன்
  13. இஞ்சி பூண்டு விழுது-1 ஸ்பூன்
  14. வெங்காயம்- 1 நீளமாக நறுக்கியது
  15. தக்காளி-1 நீளமாக நறுக்கியது
  16. கறிவேப்பிலை, கொத்தமல்லி
  17. எண்ணெய் சிறிதளவு
  18. பட்டை, கிராம்பு ஏலக்காய் அண்ணாசி பூ ஜாதிபத்திரி

வழிமுறைகள்

  1. இடியாப்பம்: இடியாப்பம் மாவில் பீட்ரூட் சாறு, தேங்காய் எண்ணெய், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
  2. பின்னர் கொதிக்கும் வெந்நீரை சிறிது சிறிதாக சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்
  3. இடியாப்ப குழலில் சிறிது எண்ணெய் தடவி மாவினை போடவும்
  4. இடியாப்பம் தட்டில் பிழிந்து ஆவியில் வேக வைக்கவும்
  5. முள்ளங்கி குருமா: குக்கரில் எண்ணெய் விட்டு நன்றாக காய்ந்ததும் பட்டை பெருஞ்சீரகம் கிராம்பு ஏலக்காய் அண்ணாசி பூ ஆகியவற்றை சேர்க்கவும்
  6. பின்னர் கறிவேப்பிலை வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்
  7. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வாசம் வரும் வரை வதக்கி தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்
  8. மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்
  9. நறுக்கிய முள்ளங்கி (உருளை, கேரட் சேர்த்து கொள்ளலாம்) சேர்த்து நன்றாக வதக்கவும்
  10. தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி 3 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்
  11. தேங்காய் பெருஞ்சீரகம் முந்திரி பருப்பு சேர்த்து நன்றாக விழுதாக அரைத்து கொள்ளவும்
  12. வெந்த காய்கறி கலவையுடன் தேங்காய் விழுதை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்
  13. இறுதியில் கொத்தமல்லி தழை தூவி சூடாக இடியாப்பமுடன் பரிமாறவும்
  14. சுவையான சத்தான இரவு உணவு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்