வீடு / சமையல் குறிப்பு / பிறந்தநாள் பார்ட்டி டின்னர்

Photo of Birthday Party dinner by Jayasakthi Ekambaram at BetterButter
792
1
0.0(0)
0

பிறந்தநாள் பார்ட்டி டின்னர்

Sep-22-2018
Jayasakthi Ekambaram
45 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

பிறந்தநாள் பார்ட்டி டின்னர் செய்முறை பற்றி

பீட்ரூட் பூரி வரகு பொங்கல் ராகி ஊத்தப்பம் & வடை

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • பிரெஷர் குக்
  • பாய்ளிங்
  • ஃபிரையிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. பீட்ருட் பூரி செய்வதற்கு
  2. கோதுமை மாவு அரை கிலோ
  3. பீட்ரூட் ஒன்று
  4. எண்ணெய் அரை கிலோ
  5. உப்புத் தூள் ஒன்றரை ஸ்பூன்
  6. உருளைக்கிழங்கு மசாலா செய்வதற்கு
  7. உருளைக்கிழங்கு அரை கிலோ
  8. வெங்காயம் ஒன்று
  9. தக்காளி ஒன்று
  10. இஞ்சி சிறிய துண்டு
  11. பச்சை மிளகாய் 2
  12. எண்ணெய் 3ஸ்பூன்
  13. கடுகு ஒரு ஸ்பூன்
  14. உளுத்தம் பருப்பு ஒரு ஸ்பூன்
  15. கேரட் ஒன்று
  16. வரகு பொங்கல் செய்வதற்கு
  17. வரகு 100 கிராம்
  18. பயித்தம் பருப்பு 75 கிராம்
  19. இஞ்சி ஒரு சிறிய துண்டு
  20. பச்சை மிளகாய் 2
  21. சீரகம் ஒரு ஸ்பூன்
  22. மிளகு முக்கால் ஸ்பூன்
  23. எண்ணெய் 5 ஸ்பூன்
  24. நெய் 2 ஸ்பூன்
  25. கருவேப்பிலை ஒரு கொத்து
  26. பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன்
  27. சாம்பார் செய்வதற்கு
  28. துவரம் பருப்பு நூறு கிராம்
  29. வெண்டைக்காய் கால் கிலோ
  30. வெங்காயம் ஒன்று
  31. தக்காளி 2
  32. கடுகு ஒரு டீஸ்பூன்
  33. சீரகம் அரை டீஸ்பூன்
  34. வெந்தயம் கால் ஸ்பூன்
  35. கட்டிப் பெருங்காயம் ஒரு சிறிய துண்டு
  36. மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன்
  37. சாம்பார் பொடி ஒரு ஸ்பூன்
  38. கறிவேப்பிலை ஒரு கொத்து
  39. மல்லித் தழை கைப்பிடி அளவு
  40. ராகி ஊத்தப்பம் செய்வதற்கு
  41. கேழ்வரகு மாவு அரை கப்
  42. கோதுமை மாவு அரை கப்
  43. தயிர் அரை கப்
  44. உப்புத்தூள் முக்கால் ஸ்பூன்
  45. வெங்காயம் ஒன்று
  46. தேங்காய் சட்னி செய்வதற்கு
  47. தேங்காய் அரை மூடி
  48. பொட்டுக்கடலை 2 ஸ்பூன்
  49. பச்சை மிளகாய் 4
  50. உப்புத்தூள் ஒரு ஸ்பூன்
  51. தாளிப்பதற்கு
  52. கடுகு அரை ஸ்பூன்
  53. கறிவேப்பிலை ஒரு கொத்து
  54. வடை செய்வதற்கு
  55. முழு உளுந்து 150 கிராம்
  56. வெங்காயம் ஒன்று
  57. பச்சை மிளகாய் 3
  58. இஞ்சி ஒரு சிறிய துண்டு
  59. உப்புத்தூள் முக்கால் ஸ்பூன்
  60. கறிவேப்பிலை ஒரு கொத்து
  61. கொத்து மல்லி தழை அரை கைப்பிடி அளவு

வழிமுறைகள்

  1. பீட்ரூட்டை துருவி சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்
  2. கோதுமை மாவில் இந்த பீட்ரூட் சாறு, உப்புத் தூளையும் கலந்து சிறிது எண்ணெய் கலந்து கெட்டியாக பிசையவும்
  3. இதை அரை மணி நேரம ஈர துணி போட்டு மூடி வைக்க வேண்டும்
  4. அரை மணி நேரத்திற்கு பிறகு இவற்றைத் திரட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
  5. உருளைக்கிழங்கு மசாலா செய்வதற்கு உருளைக்கிழங்கை குக்கரில் நன்றாக வேக வைத்து மசித்துக் கொள்ளவும்
  6. அடுப்பில் வாணலியை வைத்து கடுகு உளுத்தம் பருப்பு தாளிக்கவும்
  7. இதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி சேர்த்து வதக்கவும்
  8. கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
  9. சிறிது தண்ணீர் விட்டு உப்பு தூள் மஞ்சள் தூள் போடவும்
  10. மசித்த உருளைக்கிழங்கை இதில் சேர்க்கவும்
  11. கெட்டி பதம் வந்தவுடன் கொத்தமல்லி தழை தூவி அடுப்பை ஆப் செய்யவும்
  12. வரகு பொங்கல் செய்வதற்கு
  13. வரகையும் பயத்தம் பருப்பையும் உப்பு சேர்த்து குக்கரில் நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்
  14. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் நெய் சேர்த்து மிளகு சீரகம் தாளிக்கவும்
  15. அவை பொரிந்தவுடன் பொடியாக நறுக்கிய இஞ்சி பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  16. பெருங்காயத்தூள் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
  17. தாளித்து அனைத்தையும் பொங்கலில் கொட்டிக் கலக்கவும்
  18. சாம்பார் செய்வதற்கு துவரம்பருப்பை குக்கரில் நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்
  19. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் வெந்தயம் தாளிக்கவும்
  20. ஒரு இன்ச் நீளத்திற்கு வெட்டிய வெண்டைக்காயை போட்டு பிசுபிசுப்பு போகும் வரை நன்றாக வதக்கவும்
  21. அதன் பிறகு வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும்
  22. தக்காளி பெருங்காயத்தூள் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
  23. வேகவைத்த பருப்பில் இருக்கும் பருப்பு தண்ணீரை ஊற்றி மிளகாய் தூள் உப்பு தூள் சாம்பார் பொடி சேர்க்கவும்
  24. காய் வந்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்
  25. வெந்த பருப்பை அதில் சேர்த்து கொத்தமல்லி தழை போட்டு அடுப்பை ஆப் செய்யவும்
  26. ஊத்தப்பம் செய்வதற்கு கோதுமை மாவையும் ராகி மாவையும் தயிர் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்
  27. அரை மணி நேரம் நன்றாக புளிக்க விடவும்
  28. அரை மணி நேரத்திற்குப் பிறகு ஊத்தப்பம் கல்லில் இவற்றை ஊற்றி மேலே வெங்காயத்தை தூவவும்
  29. ரெண்டு பக்கமும் சிவக்க விட்டு எடுக்கவும்.
  30. தேங்காய் சட்னி செய்வதற்கு மிக்சி ஜாரில் தேங்காய் பொட்டுக்கடலை பச்சை மிளகாய் உப்பு எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக நைசாக அரைக்கவும்
  31. கடுகு கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்
  32. வடை செய்வதற்கு முழு உளுந்தை முக்கால் மணி நேரம் ஊறவைக்கவும்
  33. முக்கால் மணி நேரத்திற்கு பிறகு தண்ணீரை சுத்தமாக வடித்து விட்டு தேவையான அளவு உப்பு தூள் இஞ்சி பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக தண்ணீர் விடாமல் அரைக்கவும்
  34. மிக்ஸி ஜாரிலிருந்து ஒரு கிண்ணத்திற்கு மாற்றி வெங்காயம் கறிவேப்பிலை கொத்தமல்லித்தழை தூவி நன்றாக கலக்கவும்
  35. அடுப்பில் எண்ணெயை நன்றாக சூடாக காயவைத்து வடைகளை தட்டி போட்டு சிவக்க பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்