வீடு / சமையல் குறிப்பு / இடியாப்பம் மற்றும் தேங்காய் சால்னா

Photo of Idiappam and coconut salna by Abinaya bala at BetterButter
367
1
0.0(0)
0

இடியாப்பம் மற்றும் தேங்காய் சால்னா

Sep-22-2018
Abinaya bala
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

இடியாப்பம் மற்றும் தேங்காய் சால்னா செய்முறை பற்றி

தேங்காய் மற்றும் காய்கறிகளை வைத்து செய்யப்படும் ஒரு குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. இடியாப்பத்திற்கு அரிசி மாவு 2 கப்
  2. உப்பு ,சுடுநீர்
  3. சால்னாவுக்கு
  4. தேங்காய் அரை மூடி
  5. வெங்காயம் 2
  6. தக்காளி ஒன்று
  7. முந்திரி பருப்பு 10
  8. கேரட் ஒன்று
  9. பட்டாணி அரை கப்
  10. உருளைக்கிழங்கு 2
  11. பீன்ஸ் 5
  12. கரம் மசாலா பொடி ஒரு டீஸ்பூன்
  13. மஞ்சள் பொடி அரை டீஸ்பூன்
  14. மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன்
  15. சோம்பு சிறிதளவு
  16. பிரிஞ்சி இலை ஒன்று
  17. கிராம்பு ஏலக்காய் அன்னாசி பூ சிறிதளவு
  18. பட்டை சிறிதளவு
  19. உப்பு தேவையான அளவு
  20. எண்ணை தேவையான அளவு
  21. கொத்தமல்லி இலை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. அரிசி மாவில் சிறிதளவு உப்பு மற்றும் சுடுநீர் சேர்த்து இடியாப்ப மாவு பதத்துக்கு பிசைந்து கொள்ளவும்
  2. இடியாப்ப தட்டில் இடியாப்பத்தை பிழிந்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  3. வாணலியில் தேங்காய் முந்திரிப்பருப்பு மற்றும் கரம் மசாலா பொருட்கள் ஆகியவற்றை சேர்த்து நன்கு வறுத்து எடுத்துக் கொள்ளவும்
  4. Meanwhile குக்கரில் உருளைக்கிழங்கு கேரட் பீன்ஸ் மற்றும் பட்டாணி ஆகியவற்றை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  5. வானொலியில் அந்த வறுத்த தேங்காய் மற்றும் அதனுடன் தக்காளி மற்றும் வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்
  6. வதக்கிய அனைத்தையும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்
  7. வாணலியில் இந்த அரைத்த மசாலாவையும் மற்றும் காய்கறிகளையும் சேர்த்து மஞ்சள் தூள் கரம் மசாலா மற்றும் சில்லி பவுடர் ஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
  8. நன்கு கொதித்த பின் மல்லி இலை தூவி இறக்கினால் சுவையான தேங்காய் சால்னா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்