வீடு / சமையல் குறிப்பு / இறால் ரொட்டி தக்கடி

Photo of Prawn Thakkadi by Nafeesa Buhary at BetterButter
715
4
0.0(0)
0

இறால் ரொட்டி தக்கடி

Sep-22-2018
Nafeesa Buhary
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

இறால் ரொட்டி தக்கடி செய்முறை பற்றி

எங்கள் ஊரின் இரவு நேர ஸ்பெஷல் உணவுகளில் ஒன்றான "இறால் ரொட்டி தக்கடி" இறால் கிரேவி மற்றும் ரவை ரொட்டி சேர்ந்த செய்முறை உங்களுக்காக:blush:

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • மெயின் டிஷ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. ரவை - 1/2 கிலோ
  2. துருவிய தேங்காய் - 1 கப்
  3. தேங்காய்ப்பால் - 1 கப்
  4. இறால் - 300 கிராம்
  5. வெங்காயம் - 1/2 கிலோ
  6. தக்காளி - 1/4 கிலோ
  7. ரம்ப இலை - 1
  8. கருவேப்பில்லை - தேவைக்கு
  9. இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி
  10. மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
  11. மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
  12. தனியா தூள் - 1/2 தேக்கரண்டி
  13. சீரக தூள் - 1/2 தேக்கரண்டி
  14. பட்டை - 1
  15. கிராம்பு - 2
  16. ஏலக்காய் - 2
  17. தண்ணீர் - தேவைக்கு
  18. உப்பு - 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. முதலில் ரவையை மிதமான தீயில் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  2. ரவையுடன் உப்பு மற்றும் 500 மில்லி அல்லது தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொள்ளவும்
  3. 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
  4. துருவிய தேங்காய் சேர்த்து நன்கு கலந்து ரொட்டி பதத்திற்கு பிசைந்துக் கொள்ளவும்.
  5. சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
  6. உள்ளங்கையில் சிறிது எண்ணெய் வைத்து 1/2 இன்ச் அளவுக்கு ரொட்டி தட்டிக் கொள்ளவும்.
  7. கடாயில் எண்ணெய் விடவு‌ம்.
  8. தட்டிய ரொட்டிகளை சுட்டு எடுக்கவும்.
  9. ரொட்டிகளை டைமண்ட் வடிவத்தில் வெட்டி வைத்துக் கொள்ளவும்
  10. மற்றொரு கடாயில் தே‌ங்கா‌ய் எண்ணெய் விட்டு காய்ந்ததும்.
  11. பட்டை, கிராம்பு, ஏலக்காய், ரம்ப இலை பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  12. பின்னர் அதனுடன் மஞ்சள் தூள், மசாலா தூள், கருவேப்பிலை, வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  13. நன்கு வதங்கியதும் தண்ணீர் மற்றும் இறால் சேர்த்து வேகவிடவும்.
  14. இறுதியாக தேங்காய்ப்பால் சேர்த்து 5 நிமிடம் கழித்ததும்.
  15. தனியே எடுத்து வைத்திருந்த டைமண்ட் ரொட்டிகளை சேர்க்கவும்.
  16. சிம்மில் வைத்து 5 நிமிடங்கள் கழித்து இறக்கவும்.
  17. சுவையான மற்றும் வித்தியாசமான இரவு நேர உணவு "இறால் ரொட்டி தக்கடி" தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்