வீடு / சமையல் குறிப்பு / நான்கு வெரைட்டி சேவை - ஸ்பெஷல்(தக்காளி முட்டை,இனிப்பு, எலுமிச்சை & தக்காளி சேவை)

Photo of Four Varieties Sevai -SPL(Egg Tomato ,Lemon ,Sweet, Tomato Sevai) by Mallika Udayakumar at BetterButter
1162
0
0.0(0)
0

நான்கு வெரைட்டி சேவை - ஸ்பெஷல்(தக்காளி முட்டை,இனிப்பு, எலுமிச்சை & தக்காளி சேவை)

Sep-23-2018
Mallika Udayakumar
7 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

நான்கு வெரைட்டி சேவை - ஸ்பெஷல்(தக்காளி முட்டை,இனிப்பு, எலுமிச்சை & தக்காளி சேவை) செய்முறை பற்றி

இரவு நேர இதமான டிபன் வெரைட்டிகள்.அனைவரும் விரும்பும் சிறந்த இரவு டிபன்.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சேவை -1கிலோ(நான்கு ஆக பிரித்து கொள்ளவும்)
  2. பெரிய வெங்காயம்-4
  3. தக்காளி -4(அரைத்து வைத்துக் கொள்ளவும்)
  4. மிளகாய்த்தூள்-1-2ஸ்பூன்
  5. முட்டை-3
  6. எலுமிச்சை சாறு 2ஸ்பூன்
  7. மஞ்சள் தூள்-1/2ஸ்பூன்
  8. கடுகு-1ஸ்பூன்
  9. உடைத்த வெ.உளுத்தம் பருப்பு-2ஸ்பூன்
  10. கடலைப்பருப்பு-1/2 ஸ்பூன்
  11. பச்சை மிளகாய்-10-12
  12. கருவேப்பிலை, மல்லித்தழை-தேவை
  13. எண்ணெய்-தேவையானவை
  14. உப்பு-தேவை
  15. இனிப்பு சேவைக்கு:-
  16. நெய்-2ஸ்பூன்
  17. முந்திரி-10
  18. திராட்சை-5
  19. ஏலக்காய் தூள்-1/4,ஸ்பூன்
  20. சர்க்கரை/நாட்டு சர்க்கரை-1/2ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு கிலோ சேவையை நான்கு பாகங்களாக பிரித்து கொள்ளவும்.
  2. இனிப்பு சேவைக்கு நெய்யை காய்ச்சி அதில் முந்திரி திராட்சையை வறுத்து எடுக்கவும், சேவையில் கொட்டவும்.அதில் ஏலக்காய் தூள் மற்றும் சர்க்கரை தேவைக்கு ஏற்ப சேர்த்து சூடாக பரிமாறவும்.
  3. எலுமிச்சை சேவைக்கு .(நான்கு பாகத்தில் ஒரு பாகம்-சேவை எடுத்து கொள்ளவும்) வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் கடுகு, உளுத்தம்பருப்பு ,கடலைப்பருப்பு, பச்சை மிளகாயை, கருவேப்பிலை, மல்லித்தழை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் பிறகு அதில் எலுமிச்சம்பழம் சாறு கலந்து,உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து சிறிது நேரம் கழித்து சிம்மில் வைத்து சேவையை சேர்க்கவும்.
  4. தக்காளி மற்றும் தக்காளி முட்டை சேவைக்கு மீதிருந்த சேவை அனைத்தையும் எடுத்துக் கொள்ளவும்.வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் கடுகு, உளுத்தம்பருப்பு ,கடலைப்பருப்பு, பச்சை மிளகாயை, மிளகாய்த்தூள், மஞ்சள்த்தூள், தக்காளி (அரைத்து வைத்துக் கொள்ளவும்),உப்பு கருவேப்பிலை, மல்லித்தழை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் பிறகு சேவை அனைத்தையும் சேர்த்து நன்கு கிளறி விடவும்.அதில் ஒரு பாகத்தை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும் தக்காளி சேவை ரெடி . இன்னொரு பாகத்திற்கு
  5. வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் பிறகு அதில் பச்சை மிளகாயை சேர்த்து நன்கு வதக்கவும், அதில் முட்டை , உப்பு சேர்த்து கிளறவும்.அதை மீதியுள்ள தக்காளி சேவையில் இணைத்து கிளறி இறக்கவும்.இதே தக்காளி முட்டை சேவையும் ரெடி .
  6. இப்படி சேவையில் கொட்டவும்
  7. இதே இரவு நேர கடைகளில் கிடைக்கும் தக்காளி முட்டை சேவை வீட்டிலேயே செய்து அசத்தவும்
  8. அரை மணி நேரத்தில் நான்கு விதமான இரவு உணவை செய்து அசத்துங்கள்.சுவையும் பிரமாதம் ஆக இருக்கும்..... கெட்டியான தேங்காய் சட்னியுடன்... போங்க.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்