வீடு / சமையல் குறிப்பு / 4 வாரங்களுக்கு ஒருமுறை செய்யப்பட வேண்டிய திணையில் செய்யப்பட்ட ஹெல்த்தி கார பணியார வகைகள்

Photo of 4 types of healthy thinai paniyarams by poorani Kasiraj at BetterButter
421
1
0.0(0)
0

4 வாரங்களுக்கு ஒருமுறை செய்யப்பட வேண்டிய திணையில் செய்யப்பட்ட ஹெல்த்தி கார பணியார வகைகள்

Sep-23-2018
poorani Kasiraj
360 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

4 வாரங்களுக்கு ஒருமுறை செய்யப்பட வேண்டிய திணையில் செய்யப்பட்ட ஹெல்த்தி கார பணியார வகைகள் செய்முறை பற்றி

முந்திரி பணியாரம், ராகி பணியாரம், கம்பு பணியாரம், துவரம்பருப்பு பணியாரம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பணியாரத்துக்கு தேவையான பொருட்கள்
  2. முந்திரி கால் கப்
  3. திணை ஒரு கப்
  4. உளுந்து கால் கப்
  5. கரம் மசாலா ஒரு ஸ்பூன்
  6. வெங்காயம் ஒன்று
  7. சீரகம் சிறிது
  8. மிளகு தூள் சிறிது
  9. கருவேப்பிலை பொடியாக நறுக்கியது
  10. உப்பு தேவையான அளவு
  11. எண்ணெய் தேவையான அளவு
  12. ராகி பணியாரம் செய்ய தேவையான பொருட்கள்
  13. ராகி கால் கப்
  14. திணை ஒரு கப்
  15. பாசிப்பருப்பு கால் கப்
  16. வெங்காயம் ஒன்று
  17. உப்பு தேவையான அளவு
  18. பச்சை மிளகாய் தேவையான அளவு
  19. சீரகத்தூள் மிளகுத்தூள் தேவையான அளவு
  20. பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை தேவையான அளவு
  21. எண்ணை தேவையான அளவு
  22. கம்பு பணியாரம் செய்வதற்கு தேவையான பொருட்கள்
  23. கம்பு கால் கப்
  24. திணை ஒரு கப்
  25. கடலைப்பருப்பு கால் கப்
  26. வெங்காயம் ஒன்று
  27. உப்பு தேவையான அளவு
  28. பச்சை மிளகாய் 2
  29. கருவேப்பிலை பொடியாக நறுக்கியது
  30. மிளகுத்தூள் சீரகத்தூள்
  31. எண்ணெய் தேவையான அளவு
  32. துவரம் பருப்பு பணியாரம்
  33. துவரம் பருப்பு கால் கப்
  34. தினை அரிசி ஒரு கப்
  35. தேங்காய்த்துருவல் 2ஸ்பூன்
  36. உப்பு
  37. வெங்காயம் ஒன்று
  38. பச்சை மிளகாய் 2
  39. பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை
  40. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முந்திரி பணியாரம் செய்வதற்கு
  2. முந்திரியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  3. வெங்காயம் கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்
  4. ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை நன்கு வதக்கிக் கொள்ளவும்
  5. பச்சை மிளகாய் கருவேப்பிலை கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கவும்
  6. ஒரு மிக்ஸி ஜாரில் தினை அரிசியையும் உளுந்தையும் நன்கு அரைத்துக் கொள்ளவும்
  7. உப்பு சேர்த்து வெங்காயத்தை சேர்க்கவும்
  8. மாவினை ஆறு மணி நேரத்திற்கு பிறகு உடலானது உடனடியாகவும் ஊற்றலாம்
  9. திணை உளுந்து ஆகியவற்றை உடனடியாக ஊற்றலாம் அல்லது 6 மணி நேரம் வைத்துவிட்டு ஊற்றலாம்
  10. அதற்கு முன்னர் வதக்கிய பொருட்களை அதனுடன் சேர்த்து கலக்கி ஊற்றவும்
  11. சட்டியை அடுப்பில் வைத்து சூடானதும்
  12. குழிப்பணியாரக் கல்லில் மாவை ஊற்றி அதன் மேல் முந்திரி பருப்பின் அதை விடவும்
  13. இருபுறமும் வேக விடவும்
  14. முந்திரி பணியாரம் ரெடி
  15. ராகி பணியாரம்
  16. ஒரு மிக்ஸி ஜாரில் தினை ராகி உளுந்து அரைத்துக் கொள்ளவும்
  17. ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை வதக்கவும்
  18. அதனுடன் பச்சை மிளகாய் விழுது சீரகத்தூள் சேர்த்து வதக்கவும்
  19. பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை நறுக்கிய வெங்காயம் சேர்த்து கலந்து கொள்ளவும்
  20. குழிப்பணியாரக் கல்லில் சிறிது எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் மாவை ஊற்றி இரண்டு பக்கமும் வேக விட்டு எடுக்கவும்
  21. ராகி பணியாரம் ரெடி
  22. கம்பு பணியாரம் செய்வதற்கு தேவையான பொருட்கள்
  23. ஒரு மிக்ஸி ஜாரில் தினை அரிசி கடலைப்பருப்பு கம்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்
  24. மாவுடன் உப்பு சேர்த்துக் கொள்ளவும்
  25. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை வதக்கிக் கொள்ளவும்
  26. பச்சை மிளகாய் கருவேப்பிலை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்
  27. மிளகுத்தூள் சீரகத்தூள் சேர்த்துக் கொள்ளவும்
  28. வதக்கிய பொருட்கள் அனைத்தையும் மாவுடன் சேர்த்து கலக்கி கொள்ளவும்
  29. குழிப்பணியாரக் கல்லில் எண்ணெய் ஊற்றி
  30. என்னை சூடானவுடன் மாவினை ஊற்றி இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்
  31. கம்பு பணியாரம் ரெடி
  32. ஒரு மிக்ஸி ஜாரில் தினை அரிசி துவரம் பருப்பு தேங்காய் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்
  33. மாவு உடன் உப்பு சேர்த்துக் கொள்ளவும்
  34. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
  35. இதனுடன் சீரகம் மிளகு தூள் சேர்த்து வதக்கவும்m
  36. பொருட்களை மாவுடன் சேர்த்து கலக்கி கொள்ளவும்
  37. குழிப்பணியார சட்டியில் எண்ணெய் சூடானதும் மாவை ஊற்றி இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்
  38. துவரம் பருப்பு பணியாரம் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்