வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் பால் கோதுமை பரோட்டா வித் கேரளா ஸ்டைல் மரவள்ளிகிழங்கு கறி

Photo of Coconut Wheat Parota With Kerala style Topioca Curry by Fathima Sujitha at BetterButter
474
3
0.0(0)
0

தேங்காய் பால் கோதுமை பரோட்டா வித் கேரளா ஸ்டைல் மரவள்ளிகிழங்கு கறி

Sep-23-2018
Fathima Sujitha
40 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் பால் கோதுமை பரோட்டா வித் கேரளா ஸ்டைல் மரவள்ளிகிழங்கு கறி செய்முறை பற்றி

ரொம்ப Soft ஆன பரோட்டா மற்றும் ருசியான கேரளத்து மரவள்ளிகிழங்கு கறி நல்லா இருக்கும் ...ட்ரை பண்ணி பாருங்க...!!

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • கேரளா
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சப்பாத்திக்கு : கோதுமை மாவு - 3 கப்
  2. தேங்காய் பால் - தேவையான அளவு
  3. ம.கி கறி க்கு : மரவள்ளி கிழங்கு - 1
  4. மஞ்சள் தூள் - சிறிதளவு
  5. கடுகு - 1/2 டீஸ்பூன்
  6. சீரகம் - 1/2 டீஸ்பூன்
  7. இஞ்சி - சிறிய துண்டு
  8. பூடு - 3 பல்
  9. மிளகாய் - 2
  10. வெங்காயம் - 1
  11. தக்காளி - 1
  12. மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
  13. தேங்காய் பால் - 1 கப்
  14. உப்பு - தேவையான அளவு
  15. எண்ணெய் - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. சப்பாத்திக்கு : கோதுமை மாவு உப்பு சேர்த்து தண்ணீருக்கு பதிலாக தேங்காய் பால் மட்டும் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
  2. சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 1/2 நேரம் ஊற விடவும்.
  3. தேங்காய் பால் சேர்ப்பதால் ரொம்ப நேரம் வைக்க கூடாது ...இந்த சப்பாத்தி ரொம்ப ருசியாகவும், Soft ஆகவும் இருக்கும்.
  4. பின் சப்பாத்தியாக திரட்டி சுட்டெடுக்கவும்.
  5. சுவையான தேங்காய் பால் சப்பாத்தி தயார் ...!!!
  6. மரவள்ளி கிழங்கு கறி : முதலில் ஒரு பாத்திரத்தில் தோல் நீக்கிய மரவள்ளி கிழங்குகளை சிறு துண்டுகளாக கட் செய்து எடுத்து கொள்ளவும்.
  7. தண்ணீர் ஊற்றி சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்து தண்ணீரை வடித்து எடுத்து கொள்ளவும்.
  8. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்க்கவும்.
  9. சீரகம் சேர்க்கவும்.
  10. நறுக்கிய இஞ்சி பூடு மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  11. வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  12. வதங்கியதும் தக்காளி சேர்க்கவும்.
  13. மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
  14. பின் வேக வைத்துள்ள மரவள்ளிகிழங்கை சேர்க்கவும்.
  15. நன்கு வதங்கியதும் உப்பு சேர்த்து கிளறவும் ..கிளரும் போதே மசித்து கொள்ளவும்.
  16. இறுதியாக தேங்காய் பால் சேர்த்து நன்கு கிளறி கிரேவி பதத்திற்கு வந்த உடன் அடுப்பை Off செய்யவும்...
  17. ருசியான மரவள்ளிகிழங்கு கறி ரெடி..!!

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்