வீடு / சமையல் குறிப்பு / முளைகட்டிய பாசி பயறு வெஜ் தோசை பிஸா

Photo of Sprout green gram veg dosa pizza. by Balajayasri Dhamu at BetterButter
239
1
0.0(0)
0

முளைகட்டிய பாசி பயறு வெஜ் தோசை பிஸா

Sep-23-2018
Balajayasri Dhamu
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

முளைகட்டிய பாசி பயறு வெஜ் தோசை பிஸா செய்முறை பற்றி

முளை கட்டிய பச்சை பயறு ,கேரட், பீட்ரூட், வெங்காயம், வெள்ளரி துருவல் பயன்படுத்தி செய்தது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தோசை மாவு 1கப்
  2. முளைகட்டிய பாசிபயறு1கப்
  3. கேரட்1
  4. பீட்ரூட்1
  5. வெங்காயம்1
  6. வெள்ளரி துருவல்3ஸ்பூன்
  7. பாதாம் பருப்பு துருவல்2ஸ்பூன்
  8. நல்ல எண்ணெய் அ நெய்2ஸ்பூன்
  9. உப்பு தேவையான அளவு
  10. மிளகு தூள்1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. தோசை மாவு உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்
  2. கேரட், பீட்ரூட், வெங்காயம், வெள்ளரி துருவல் செய்து கொள்ள வேண்டும்
  3. பின்னர் அனைத்தையும் சேர்த்து உப்பு சிறிது கலந்து கொள்ள வேண்டும்
  4. தோசை கல் சூடானதும் மாவை ஊத்தாப்பம் போல ஊற்றவும்.
  5. முளைகட்டிய பாசிபயறு முதலில் தூவி கொள்ள வேண்டும்
  6. பின்னர் துருவி கலந்து வைத்த காய்களை தூவவும்
  7. துருவிய பாதாம் பருப்பு சேர்க்கவும்.
  8. மிளகு தூள் தூவி எண்ணெய் அ நெய் விட்டு திருப்பி போடவும்.
  9. 1 நிமிடம் கழித்து மொருகளானதும் எடுக்கவும்.
  10. இப்போது சுவையான சத்தான முளைகட்டிய பாசிபயறு வெஜ் தோசை பிட்சா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்