டார்டில்லா பின்வீல்கள் (பசலிக்கீரை - சீஸ் பெஸ்டோ மினி கடிகள்) | Tortilla pinwheels (Spinach and cheese-Pesto Mini Bites) in Tamil

எழுதியவர் Mani Mukhija  |  27th Jun 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Tortilla pinwheels (Spinach and cheese-Pesto Mini Bites) by Mani Mukhija at BetterButter
டார்டில்லா பின்வீல்கள் (பசலிக்கீரை - சீஸ் பெஸ்டோ மினி கடிகள்)Mani Mukhija
 • ஆயத்த நேரம்

  15

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  5

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  10

  மக்கள்

570

0

Video for key ingredients

  டார்டில்லா பின்வீல்கள் (பசலிக்கீரை - சீஸ் பெஸ்டோ மினி கடிகள்) recipe

  டார்டில்லா பின்வீல்கள் (பசலிக்கீரை - சீஸ் பெஸ்டோ மினி கடிகள்) தேவையான பொருட்கள் ( Ingredients to make Tortilla pinwheels (Spinach and cheese-Pesto Mini Bites) in Tamil )

  • 1 பேக் புரீட்டோ அளவிலான டார்டில்லா
  • 2 கப் பேபி பசலிக்கீரை கழுவி நறுக்கப்பட்டது ( அல்லது நறுக்காமலும் பயன்படுத்தலாம்)
  • 1 கப் கிரீம் வெண்ணெய் மிருதுவாக்கப்பட்டது
  • ½ கப் ராஞ் டிரஸ்சிங்
  • சுவைக்கேற்ற அளவு உப்பும் மிளகு
  • 1 கப் ரோமா தக்காளி (தக்காளியின் மீது குறுக்காக வெட்டப்பட்டதை வைக்கவும்)
  • ¼ கப் புதிய புதினா இலைகள்
  • ¼ கப் புதிய கொத்துமல்லி அல்லது வேர்க்கோசு
  • 2 உலர் முழு சிவப்பு மிளகாய்
  • 1 தேக்கரண்டி வறுத்த வேர்க்கடலை
  • 4 பல் பூண்டு
  • சுவைக்கேற்ற அளவு சர்க்கரை
  • ஒரு கிண்ணம் ஐஸ் கட்டிகள்

  டார்டில்லா பின்வீல்கள் (பசலிக்கீரை - சீஸ் பெஸ்டோ மினி கடிகள்) செய்வது எப்படி | How to make Tortilla pinwheels (Spinach and cheese-Pesto Mini Bites) in Tamil

  1. பெஸ்ட்டோவைத் தயாரிக்க, ஒரு சாஸ் பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்கவைக்கவும். தண்ணீர் கொதிக்கும்போது தக்காளியைத் தண்ணீரில் 3-4 நிமிடங்கள் வைக்கவும்.
  2. தக்காளி மிருதுவானதும் தோல் உரியத் துவங்கியதும், தக்காளியைத் தண்ணீரில் இருந்து எடுத்து ஒரு ஐஸ் பாத் கொடுக்கவும், வேகுவதை நிறுத்துவதற்கு.
  3. தோலை உரிக்கவும். இப்போது தக்காளியை பிளண்டரில் மற்றப் பொருள்களோடு பெஸ்டோ செய்வதற்குப் போடவும்.
  4. ஒரு ஸ்டாண்ட் மிக்சரில் மிருவாக்கப்பட்ட கிரீம் வெண்ணெய், ரான்ச் டிரஸ்சிங், கொஞ்சம் உப்பு மிளகை எடுத்துக்கொள்ளவும். அனைத்தையும் நன்றாகக் கலந்து மிதமான வேகத்தில் பரவலைத் தயாரிக்க அரைத்து்ககொள்ளவும்.
  5. சமதள இடத்தில் அல்லது கட்டிங் போர்டில் டார்டில்லாக்களை வைத்து கிரீம் சீஸை ஒவ்வொரு டார்டில்லாவின் ஒரு பக்கத்திலும் முழு பரப்பும் மூடும்படிக்குச் சமமாகத் தடவவும்.
  6. ஒரு அடுக்கு நறுக்கிய பசலிக்கீரையைக் கிரீம் சீஸ் அடு்க்கை முழுமையாக மூடுவதற்குச் சேர்க்கவும்.
  7. டார்டில்லாவின் மத்தியில் தக்காளி-புதினா பெஸ்டோவை பரப்பவும்.
  8. உங்களுக்கு முன் பெஸ்டோ அடுக்குக்கு இணையாக வைத்து, டார்டில்லாவை அடுத்த முனைவரை அழுத்தி உருட்ட ஆரம்பிக்கவும். அழுத்தி உருட்டவேண்டாம், பூரணம் வெளியேறிவிடும்.
  9. உருட்டிய அனைத்து டார்டில்லாக்களையும் பிரிஜ்ஜில் ஒரு மணி நேரத்திற்கு வைக்கவும். வெண்ணெய் கெட்டியாகும்.
  10. பரிமாறுவதற்கு முன் வெளியில் எடுத்து சம அளவுள்ள மினி ரோல்களாக டார்டில்லாக்களை துண்டுபோட்டுக்கொள்ளவும்.
  11. சில்லென்று பரிமாறி விருந்தை அனுபவிக்கவும்!

  எனது டிப்:

  நான் பயன்படுத்தி ரோமா தக்காளியும் புதினா டிப்பும், மினி ரோல்-அப்களுக்கு கூடுதல் விளிம்பையும் ருசியையும் சேர்க்கிறது.

  Reviews for Tortilla pinwheels (Spinach and cheese-Pesto Mini Bites) in tamil (0)

  சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.