வீடு / சமையல் குறிப்பு / பூரி, கிழங்கு மசாலா

Photo of Poori and kilangu masala by Rabia Hamnah at BetterButter
952
2
0.0(0)
0

பூரி, கிழங்கு மசாலா

Sep-24-2018
Rabia Hamnah
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பூரி, கிழங்கு மசாலா செய்முறை பற்றி

சுவையான க்ரிஸ்பி மற்றும் சாஃப்டான குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் டின்னர்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • பேசிக் ரெசிப்பி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பூரி செய்ய தேவையான பொருட்கள்:
  2. கோதுமை மாவு-1கப்
  3. மைதா-1/4-1/2கப்
  4. ரவை-2டேபிள்  ஸ்பூன்
  5. சீனி-2 டீஸ்பூன்
  6. உப்பு-தேவைக்கு
  7. சுடு தண்ணீர்
  8. பால்-2டேபிள்ஸ்பூன்
  9. எண்ணெய்- பொறிக்க
  10. கிழங்கு மசாலா செய்ய தேவையான பொருட்கள்:.
  11. உருளை கிழங்கு- 3-4
  12. ப.மிளகாய்-2
  13. பெரிய வெங்காயம் -2
  14. மஞ்சள் தூள்-1ஸ்பூன்
  15. எண்ணெய்-1டேபிள் ஸ்பூன்
  16. சோம்பு,கடுகு,உளுந்து-  தாளிக்க
  17. கறிவேப்பிலை,மல்லி இலை தேவைக்கு
  18. உப்பு- தேவைக்கு

வழிமுறைகள்

  1. பூரி செய்முறை:- மைதா, கோதுமை, ரவை, இவை அனைத்தையும் ஒரு அகன்ற பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  2. பின்  சீனி,உப்பு ,பால் சேர்த்து கிளறி விடவும். பின்பு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து பிசையவும்.
  3. பிசைந்த மாவைஅரை மணி நேரம் ஊர வைத்து விடவும். ஊரிய மாவை சின்ன வட்டமாக வீசி எண்ணெயில் பூரியை பொறித்து எடுக்கவும்.
  4. பூரி ரெடி
  5. கிழங்கு மசாலா செய்முறை: சட்டியை காய வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் சோம்பு,கடுகு,உளுந்து, கறிவேப்பிலை  போட்டு தாளிக்கவும். 
  6. பின் நீள வாக்கில் வெட்டிய வெங்காயம்,  கீறிய மிளகாய் போட்டு நன்கு வதக்கவும்.மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும்.
  7. மசித்த கிழங்கை சேர்க்கவும். பின் தேவையான தண்ணீர் உப்பு சேர்த்து நன்கு கிளறி இரக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்