வீடு / சமையல் குறிப்பு / திணை வெஜிடபிள் கிச்சடி

Photo of Thinai Vegetable Khichadi by Sowmya Sundar at BetterButter
430
0
0.0(0)
0

திணை வெஜிடபிள் கிச்சடி

Sep-24-2018
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

திணை வெஜிடபிள் கிச்சடி செய்முறை பற்றி

திணை , பாசிப் பருப்பு மற்றும் காய்கறிகள் சேர்த்து செய்த ஆரோக்கியமான கிச்சடி.இதை ஒன் பாட் மீலாக சுலபமாக செய்து விடலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. திணை அரிசி 1.5 கப்
  2. தண்ணீர் 4 கப்
  3. பாசிப்பருப்பு கால் கப்
  4. பீன்ஸ் கேரட் வெங்காயம் சேர்த்து அரை கப்
  5. பச்சை மிளகாய் 3
  6. இஞ்சி ஒரு துண்டு
  7. எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்
  8. கடுகு , உளுத்தம்பருப்பு தலா அரை டீஸ்பூன்
  9. கறிவேப்பிலை சிறிது
  10. உப்பு தேவையான அளவு
  11. மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து கொட்டி பச்சை மிளகாய் ,இஞ்சி மற்றும் காய்கறிகளை சேர்த்து லேசாக வதக்கவும்
  2. பின்னர் அதில மஞ்சள் தூள், உப்பு , தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  3. தினை அரிசி மற்றும் பாசிப்பருப்பை களைந்துவிட்டு கொதிக்கும் நீரில் சேர்த்து குக்கரை மூடி 3 விசில் வரை மிதமான தீயில் வேக வைக்கவும்
  4. சூடான திணை வெஜிடபிள் கிச்சடி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்