வீடு / சமையல் குறிப்பு / முட்டை முருங்ககீரை கொத்துபரோட்டா

Photo of Koththu parota by Jaleela Kamal at BetterButter
349
1
0.0(0)
0

முட்டை முருங்ககீரை கொத்துபரோட்டா

Sep-24-2018
Jaleela Kamal
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

முட்டை முருங்ககீரை கொத்துபரோட்டா செய்முறை பற்றி

இரவு உண்விற்கு மிக சுலபமாக செய்ய கூடிய டிபன்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஷாலோ ஃபிரை
  • மைக்ரோவேவிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வெங்காயம் 2 நீளவாக்கில் அரிந்தது
  2. இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 தேக்கரண்டி
  3. பச்ச மிளகாய் ஒன்று பொடியாக அரிந்தது
  4. மிளகாய் தூள் அரை தேக்கரண்டி
  5. மஞ்சள் தூள் கால் தேக்கரண்டி
  6. உப்பு தேவையான அளவு
  7. முட்டை இரண்டு
  8. மீதியான இரண்டு பெரிய பரோட்டா
  9. எண்ணை + பட்டர் இரண்டு தேக்கரண்டி
  10. மிளகு தூள் கால் தேக்கரண்டி
  11. தக்காளி அரை பழம்
  12. சாட் மசாலா அல்லது சென்னா மசாலா அரை தேக்கரண்டி
  13. முருங்கக்கீரை இரண்டு மேசை கரண்டி
  14. கருவேப்பிலை 5 இதழ்
  15. சோம்பு தேவை பட்டால் கால் தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. பரோட்டாவை சிறிது தண்ணீ தெளித்து மைக்ரோ வேவில் லேசாக சூடு படுத்து கத்தரி கோலால் குறுக்கும் நெடுக்குமாய் சின்ன துண்டுகளாக கட் செய்து வைக்கவும்.
  2. முட்டையை மிளகு தூள் உப்பு தூள் மஞ்சள் தூள் போட்டு நன்கு அடித்து வைக்கவும்.
  3. ஒரு வாயகன்ற பேனை சூடு படுத்தி அதில் எண்ணை ,பட்டர் சேர்த்து சோம்பு,இஞ்சி பூண்டு பேஸ்ட் , கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
  4. பிறகு வெங்காயம் பச்சமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
  5. அடுத்து தக்காளி உப்பு மிளகாய் தூள் ,சென்னா மசாலா,முருங்கக்கீரை சேர்த்து வதக்கவும்.
  6. அடித்து வைத்த முட்டையை மேலே பரவலாக ஊற்றி முடி போட்டு அரை நிமிடம்.விடவும்.
  7. முடியை திறந்து முட்டையை அப்படியே உடைக்காமல் திருப்பி போடவும்.
  8. சிறிது வெந்ததும் அப்ப்டியே கீறி விட்டு கட் செய்து வைத்த பரோட்டாவை சேர்த்து கொத்தவும்.
  9. கடைசியாக சிறிது சிறிது பட்டர் சேர்த்து கொத்துமல்லி தழை சேர்த்து ஒரு கிளறு கிளறி இரக்கவும்.
  10. கடைசியாகப சிறிது மிளகு தூள் மற்றும் எலுமிச்சை சாறு பிழிந்து சாப்பிடவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்