உசிலி | Usili in Tamil

எழுதியவர் Menaga Sathia  |  24th Sep 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Usili by Menaga Sathia at BetterButter
உசிலிMenaga Sathia
 • ஆயத்த நேரம்

  10

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  20

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

0

0

உசிலி recipe

உசிலி தேவையான பொருட்கள் ( Ingredients to make Usili in Tamil )

 • பச்சரிசி -1 கப்
 • பாசிப்பருப்பு -1/4 கப்
 • நீர் -2 1/2 கப்
 • உப்பு - தேவைக்கு
 • தாளிக்க:
 • எண்ணெய் -1 டேபிள்ஸ்பூன்
 • நெய் -1 டேபிள்ஸ்பூன்
 • கடுகு -1/2டீஸ்பூன்
 • உளுத்தம்பருப்பு -1/2 டீஸ்பூன்
 • காய்ந்தமிளகாய் -3
 • கடலைபருப்பு -1 டேபிள்ஸ்பூன்
 • கறிவேப்பிலை -1 ஈர்க்கு
 • பெருங்காயபொடி -1/4 டீஸ்பூன்

உசிலி செய்வது எப்படி | How to make Usili in Tamil

 1. அரிசி+பாசிப்பருப்பு இவற்றை தனிதனியாக வெறும் கடாயில் வாசனை வரும் வரை வறுத்து கழுவி நீரை வடிக்கவும்.
 2. குக்கரில் எண்ணெய்+நெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்கவும்.
 3. பின் கழுவிய அரிசி,பருப்பு,உப்பு,நீர் சேர்த்து 3 விசில் வரை வேகவைக்கவும்.
 4. ப்ரெஷர் அடங்கியதும் முள்கரண்டியால் கிளறிவிடவும்.
 5. சூடாக தேங்காய் சட்னியுடன் பரிமாற சுவையாக இருக்கும்.

Reviews for Usili in tamil (0)