வீடு / சமையல் குறிப்பு / கோதுமை ரவை முருங்கை இலை தோசை

Photo of Wheat Rava Drumstick leaves dosa by Fathima Beevi at BetterButter
393
1
0.0(0)
0

கோதுமை ரவை முருங்கை இலை தோசை

Sep-24-2018
Fathima Beevi
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கோதுமை ரவை முருங்கை இலை தோசை செய்முறை பற்றி

கோதுமை ரவை முருங்கை இலை தோசை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ரவை -1/4 கப்
  2. கோதுமை மாவு - 2 கப்
  3. கருவேப்பிலை - 1 டேபிள்ஸ்பூன்
  4. பெரிய வெங்காயம் -1 நன்றாக நறுக்கிக் கொள்ளவும்
  5. பச்சை மிளகாய் -1 நன்றாக நறுக்கிக் கொள்ளவும்
  6. முருங்கை இலை-1/2 கப்
  7. உப்பு- தேவையான அளவு
  8. மஞ்சள் தூள்- 1/4 டீ ஸ்பூன்
  9. பெருங் காயத்தூள்- 1 சிட்டிகை
  10. கடுகு-1/4 டீ ஸ்பூன்
  11. கரம் மசாலா தூள்- ஒரு சிட்டிகை
  12. எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் ரவை, கோதுமை மாவு, உப்பு சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலக்கி கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடான பின் கடுகு பொடித்து கொள்ளவும்.
  3. பின்பு நறுக்கிய வெங்காயம், நறுக்கிய மிளகாய், முருங்கை இலை மற்றும் கருலேப்பில்லை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு வதக்கவும்.
  4. நன்கு வதங்கியதும்  மஞ்சள்தூள், பெருங்காயத் தூள் மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.
  5. வதக்கிய கலவையை தோசை மாவுடன் சேர்த்து நன்கு கிளறவும்.
  6. சிறிது எண்ணெயை தோசைக்கல்லில் தேய்த்து பின்பு ஒரு கரண்டி மாவை ஊற்றி தோசைகளாக வார்த்து எடுக்கவும்
  7. சூடான தோசைகளை தேங்காய் சட்னி மற்றும் தக்காளி சட்னியுடன் பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்