வீடு / சமையல் குறிப்பு / முருங்கை கீரை இட்லி பொடி

Photo of Drumstick tree leaves Idly Poodi by Fathima Sujitha at BetterButter
464
1
0.0(0)
0

முருங்கை கீரை இட்லி பொடி

Sep-25-2018
Fathima Sujitha
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

முருங்கை கீரை இட்லி பொடி செய்முறை பற்றி

சாதாரணமாக செய்யும் இட்லி பொடியை விட இது சத்தானதும் ,சுவையும் அருமையாக இருக்கும்... இட்லி பொடி குழந்தைகளுக்கு ரொம்ப பிடித்தமான ஒன்று ..அதில் எப்படி சத்து சேர்க்கலாம் னு யோசிக்கும் போது இந்த ஐடியா வந்துச்சி... முருங்கை கீரை பிடிக்காதவங்க கூட இந்த இட்லி பொடியை ரசிச்சி ருசிச்சி சாப்பிடுவாங்க ..வாங்க எப்படி செய்யலாம்னு பார்க்கலாம்..!!

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ரோசஸ்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உளுந்த பருப்பு - 1 கப்
  2. கடலை பருப்பு - 1 கப்
  3. துவரம் பருப்பு - 1 கப்
  4. வேர்கடலை - 1 கப்
  5. எள்ளு - 1/2 கப்
  6. வத்தல் - 6 ( காரத்திற்கு ஏற்றார் போல)
  7. முருங்கை கீரை - தேவையான அளவு
  8. உப்பு - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் முருங்கை கீரையை நன்கு கழுவி வெயில் 2 நாள்கள் காய வைக்கவும்.
  2. நன்கு காய்ந்து இருக்க வேண்டும்.
  3. பின் நாம் குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு பொருள்களையும் தனி தனியாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
  4. எள்ளை முதலில் வறுத்துக் கொள்ளவும் ...ஏனென்றால் அது சீக்கிரம் கறுகி விடும் என்பதால் ..
  5. அடுத்து உளுந்த பருப்பு,கடலை பருப்பு, துவரம் பருப்பு, வேர்கடலை, வத்தல் என ஒன்றொன்றாக வறுத்து எடுத்து கொள்ளவும்.
  6. இவை நன்கு ஆற விடவும்.
  7. மிக்ஸியில் வறுத்த அனைத்தையும் சேர்த்து உப்பும் சேர்த்து அரைத்து கொண்டு பின் காய வைத்துள்ள முருங்கை கீரையை சேர்த்து அரைக்கவும்.
  8. இட்லி பொடி பதத்திற்கு வந்ததும் காற்று புகாத ஒரு டப்பாவில் போட்டு வைக்கவும்.
  9. நல்லெண்ணை ஊற்றியும் சாப்பிடலாம் ...சும்மா இந்த பொடியை வைத்து சாப்பிடலாம் ..
  10. இட்லி ,தோசை , ஆப்பம், உடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்