வீடு / சமையல் குறிப்பு / மினி ஊத்தாப்பம் ப்ளேட்டர்

Photo of Mini uthappam platter by Vahitha Hasan at BetterButter
271
1
0.0(0)
0

மினி ஊத்தாப்பம் ப்ளேட்டர்

Sep-25-2018
Vahitha Hasan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மினி ஊத்தாப்பம் ப்ளேட்டர் செய்முறை பற்றி

சுலபமாக செய்யக்கூடிய ஊத்தாப்பம் வகைகள்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வெங்காய ஊத்தாப்பம்
  2. 2 மேசைக்கரண்டி நறுக்கிய வெங்காயம்
  3. 1 குழி கரண்டி தோசை மாவு
  4. 1 தேக்கரண்டி நல்லெண்ணெய்
  5. பொடி ஊத்தாப்பம்
  6. 1 குழி கரண்டி தோசை மாவு
  7. 1 மேஜைக்கரண்டி இட்லிப் பொடி
  8. 1 தேக்கரண்டி நல்லெண்ணெய்
  9. முட்டை ஊத்தாப்பம்
  10. 1 குழி கரண்டி தோசை மாவு
  11. 1 முட்டை அடித்தது
  12. சிறிது உப்பு
  13. சிறிது மிளகுத்தூள்
  14. 1 தேக்கரண்டி நல்லெண்ணெய்
  15. காளான் ஊத்தாப்பம்
  16. 1 குழி கரண்டி தோசை மாவு
  17. 1மேஜைகரண்டி நறுக்கிய காளான்
  18. மேசைக்கரண்டி நறுக்கிய வெங்காயம்
  19. உப்பு தேவையான அளவு
  20. சிறிது மிளகு தூள்
  21. காய்கறி ஊத்தாப்பம்
  22. 1 மேசைக்கரண்டி நறுக்கிய வெங்காயம்
  23. மேசைக்கரண்டி நறுக்கிய காய்கறிகள்
  24. உப்பு தேவையான அளவு
  25. குழி கரண்டி தோசை மாவு

வழிமுறைகள்

  1. ஊத்தப்பம் குழியில் எண்ணெய் விட்டு தோசை மாவை ஊற்றவும்
  2. மாவின் மேல் நறுக்கிய வெங்காயத்தை தூவி மூடி வைக்கவும்
  3. ஊத்தாப்பத்தை திருப்பி போட்டு, எண்ணெய் விட்டு வெங்காயம் பொன்னிறமாகும் வரை வைத்து எடுத்து பரிமாறவும்
  4. பொடி ஊத்தாப்பம்
  5. ஊத்தாப்பக்குழியில் எண்ணெய் விட்டு தோசை மாவை ஊற்றவும்
  6. மாவின் மேல் இட்லி பொடியை தூவவும்
  7. தோசையைத் திருப்பிப் போட்டு எண்ணெய் ஊற்றி எடுக்கவும்
  8. காளான் ஊத்தாப்பம்
  9. கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் நறுக்கிய காளான் உப்பு மிளகு தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கி ஆறவிடவும்
  10. ஊத்தாப்பக்குழியில் தோசை மாவை ஊற்றி அதன் மேல் நறுக்கிய காளானை தூவி அடுப்பை குறைத்து மூடி வைக்கவும்
  11. ஊத்தாப்பத்தை திருப்பி போட்டு வெந்ததும் எடுத்து பரிமாறவும்
  12. முட்டை ஊத்தாப்பம்
  13. ஒரு கோப்பையில் முட்டையை உடைத்து அதில் உப்பு மிளகு தூள் போட்டு நன்கு அடித்து வைத்து கொள்ளவும்
  14. ஊத்தாப்பம் குழியில் தோசை மாவை ஊற்றி அதன் மேல் அடித்த முட்டையை ஊற்றி அடுப்பை குறைத்து தோசையை மூடி வைக்கவும்
  15. ஊத்தாப்பத்தை திருப்பி போட்டு வெந்ததும் எடுத்து பரிமாறவும்
  16. காய்கறி ஊத்தாப்பம்
  17. கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம் காய்கறி உப்பு மிளகு தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கி பின்பு ஆற விடவும்
  18. ஊத்தாப்பக்குழியில் தோசை மாவை ஊற்றி அதன் மேல் வதக்கிய காய்கறிகளை தூவவும்
  19. ஊத்தாப்பத்தை திருப்பி போட்டு வெந்ததும் எடுத்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்