வீடு / சமையல் குறிப்பு / இன்ஸ்டன்ட் ஸ்வீட்கார்ன் ரவா இட்லி

Photo of Instant Sweetcorn Rava Idly by Sowmya Sundar at BetterButter
0
0
0(0)
0

இன்ஸ்டன்ட் ஸ்வீட்கார்ன் ரவா இட்லி

Sep-25-2018
Sowmya Sundar
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

இன்ஸ்டன்ட் ஸ்வீட்கார்ன் ரவா இட்லி செய்முறை பற்றி

இரவு நேரத்தில் உடனடியாக செய்யக்கூடிய உணவு வகை இது. ஆவியில் வேக வைப்பதால் ஆரோக்கியமானது.

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • టిఫిన్ వంటకములు
  • కలయిక
  • మిళితం
  • ఆవిరికి
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உதிர்த்த ஸ்வீட் கார்ன் ஒரு கப்
  2. பாம்பே ரவை 2 கப்
  3. தயிர் 2 கப்
  4. உப்பு தேவையான அளவு
  5. தாளிக்க
  6. எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன்
  7. கடுகு ,உளுத்தம்பருப்பு ,கடலைப்பருப்பு,முந்திரி தலா அரை டீஸ்பூன்
  8. பச்சை மிளகாய் 2
  9. இஞ்சி 1 துண்டு
  10. கறிவேப்பிலை சிறிது

வழிமுறைகள்

  1. தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை தாளித்து பாம்பே ரவை சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ளவும்
  2. ஸ்வீட் கார்னை மிக்ஸியில் சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும்
  3. தாளித்த பாம்பே ரவையுடன் ஸ்வீட் கார்ன் மற்றும் தயிர், உப்பு சேர்த்து கெட்டியாக கலந்து பதினைந்து நிமிடம் வரை ஊற வைத்து கொள்ளவும்.
  4. இட்லி தட்டில் மாவை விட்டு 10 நிமிடம் ஆவியில் வேக வைத்து எடுக்கவும்
  5. சுவையான ஸ்வீட் கார்ன் ரவை இட்லி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்