வீடு / சமையல் குறிப்பு / கார புளி கொழுக்கட்டை

Photo of Kara puli kolukattai by sowmya shriram at BetterButter
309
2
0.0(0)
0

கார புளி கொழுக்கட்டை

Sep-25-2018
sowmya shriram
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கார புளி கொழுக்கட்டை செய்முறை பற்றி

பெரியவர் முதல் குழந்தைகள் வரை விரும்பி சாப்பிடும் ஒரு அருமையான உணவு.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பச்சரிசி- 1 கப்
  2. கடுகு - சிறிதளவு
  3. எண்ணெய் - தேவையான அளவு
  4. கடலைப்பருப்பு - 3 டீஸ்பூன்
  5. சீரகம்- 1 டேபிள்ஸ்பூன்
  6. வெங்காயம் - 1
  7. கருவேப்பிலை - சிறிதளவு
  8. புளி - நெல்லிக்காய் அளவு
  9. வரமிளகாய் – 8
  10. தேங்காய் - சிறிதளவு

வழிமுறைகள்

  1. பச்சரிசியை 2 மணினேரம் ஊறவைக்கவும்.
  2. பச்சரிசி, சீரகம் , கருவேப்பிலை ,புளி ,வரமிளகாய் சேர்த்து ரவை பதத்திற்கு அரைத்துக்கொள்ளவும் .
  3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு , வெங்காயம் , கருவேப்பிலை , தேங்காய் சேர்த்து வதக்கவும்.
  4. 1 கப் பச்சரிசி 4 கப் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
  5. நன்கு கொதித்தவுடன் ரவை பதத்திற்கு அரைத்த அரிசியை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
  6. கையில் ஓட்டாத பதத்திற்கு வந்ததும் உங்களுக்கு பிடித்த மாறி கொழுக்கட்டை பிடிக்கவும்.
  7. இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி ஆவி வந்தவுடன் பிடித்த கொழுக்கட்டையை வேகவைக்கவும் .
  8. 5 நிமிடம் வேகவைத்து இறக்கினால் சுவையான கார புளி கொழுக்கட்டை தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்