வீடு / சமையல் குறிப்பு / கேரட் மசாலா தோசை

Photo of Carrot Masala Dosa by Rachell Revathi Samuel at BetterButter
155
1
0.0(0)
0

கேரட் மசாலா தோசை

Sep-25-2018
Rachell Revathi Samuel
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

கேரட் மசாலா தோசை செய்முறை பற்றி

கேரட் தோசையில் மசாலா சேர்த்து செய்த கேரட் மசாலா தோசை.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. தோசை மாவு
  2. உப்பு தேவையான அளவு
  3. மசாலா செய்ய: எண்ணெய் 2 ஸ்பூன்
  4. கடுகு 1/2 ஸ்பூன்
  5. வெங்காயம் 1
  6. கருவேப்பிலை சிறிது
  7. இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
  8. மஞ்சள்தூள் 1/2 ஸ்பூன்
  9. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  10. உருளைக்கிழங்கு 3
  11. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை குக்கரில் உப்பு சேர்த்து நன்றாக வேகவைத்து எடுக்கவும்.
  2. வேகவைத்த உருளைக்கிழங்கை தோல் நீக்கி கொள்ளவும்.
  3. உருளைக்கிழங்கை மசித்து கொள்ளவும்.
  4. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சேர்த்து தாளிக்கவும்.
  5. வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  6. வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது மற்றும் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  7. மஞ்சள்தூள் சேர்க்கவும்.
  8. மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும்
  9. மிளகாய்த்தூள் சேர்க்கவும். சிறிது தண்ணீர் சேர்த்து வதக்கவும்.தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.
  10. தண்ணீர் வற்றியதும் அடுப்பில் இருந்து இறக்கவும்.
  11. தோசை மாவை பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும்.உப்பு சேர்த்து கொள்ளவும்.
  12. கேரட்டை துருவி கொள்ளவும்.
  13. மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்
  14. தோசை மாவில் அரைத்த கேரட்டை சேர்க்கவும்.நன்றாக கலந்து கொள்ளவும்.
  15. அடுப்பில் தோசைக் கல்லை வைத்து எண்ணெய் தடவி தோசை ஊற்றவும்.நெய் விட்டு கொள்ளவும்.
  16. 1 ஸ்பூன் உருளைக்கிழங்கு மசாலாவை பரப்பி விடவும்.
  17. தோசையை மடித்து எடுக்கவும்.
  18. சுவையான கேரட் மசாலா தோசை தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்