வீடு / சமையல் குறிப்பு / பீட்ரூட் மசாலா தோசை

Photo of Beetroot Masala Dosa by Rachell Revathi Samuel at BetterButter
459
1
0.0(0)
0

பீட்ரூட் மசாலா தோசை

Sep-25-2018
Rachell Revathi Samuel
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

பீட்ரூட் மசாலா தோசை செய்முறை பற்றி

பீட்ரூட் தோசையில் மசாலா சேர்த்து செய்யப்படும் தோசை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. தோசை மாவு
  2. பீட்ரூட் மிகச் சிறியது 1
  3. வெண்ணெய் தேவையான அளவு
  4. எண்ணெய் தேவையான அளவு
  5. உப்பு தேவையான அளவு
  6. மசாலா: உருளைக்கிழங்கு 3
  7. எண்ணெய் 2 ஸ்பூன்
  8. கடுகு 1/2 ஸ்பூன்
  9. வெங்காயம் 1
  10. இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
  11. கருவேப்பிலை சிறிது
  12. மஞ்சள்தூள் 1/2 ஸ்பூன்
  13. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  14. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு உப்பு சேர்த்து வேக வைத்து எடுக்கவும்.
  2. உருளைக்கிழங்கை தோல் நீக்கி எடுத்து கொள்ளவும்.
  3. உருளைக்கிழங்கை நன்றாக மசித்துக் கொள்ளவும்.
  4. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சேர்த்து தாளிக்கவும்.
  5. நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  6. வெங்காயம் வதங்கியதும் கருவேப்பிலை இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  7. மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.
  8. மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்றாக வதக்கவும்.
  9. மிளகாய்த்தூள் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக வதக்கவும்.தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.
  10. தண்ணீர் வற்றும் வரை வதக்கி இறக்கவும்.
  11. தோசைக்கு தேவையான மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
  12. பீட்ரூட் துருவி கொள்ளவும்.
  13. துருவிய பீட்ரூட்டை மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளவும்.
  14. தோசை மாவில் அரைத்த பீட்ரூட்டை சேர்க்கவும்.
  15. நன்கு கலந்து கொள்ளவும்.
  16. அடுப்பில் தோசைக் கல்லை வைத்து எண்ணெய் தடவி தோசை ஊற்றவும்.வெண்ணெய் சேர்க்கவும்.
  17. வெண்ணெய் உருகும் வரை காத்திருக்கவும்.
  18. உருளைக்கிழங்கு மசாலாவை தோசை மேல் பரப்பி விடவும்.
  19. தோசை வெந்ததும் மடித்து எடுக்கவும்.
  20. இப்படியும் மடித்து எடுக்கலாம்.
  21. சுவையான ஆரோக்கியமான பீட்ரூட் மசாலா தோசை தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்