Photo of Masala dosa by Rachell Revathi Samuel at BetterButter
414
1
0.0(0)
0

மசாலா தோசை

Sep-25-2018
Rachell Revathi Samuel
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

மசாலா தோசை செய்முறை பற்றி

தோசையின் மேல் உருளைக்கிழங்கு மசாலா வைத்து செய்யப்படும் தோசை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. தோசை மாவு
  2. உப்பு தேவையான அளவு
  3. எண்ணெய் தேவையான அளவு
  4. மசாலா: உருளைக்கிழங்கு 3
  5. எண்ணெய் 2 ஸ்பூன்
  6. கடுகு 1/2 ஸ்பூன்
  7. வெங்காயம் 1
  8. இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
  9. கருவேப்பிலை சிறிது
  10. மஞ்சள்தூள் 1/4 ஸ்பூன்
  11. மிளகாய்த்தூள் 1/2 ஸ்பூன்
  12. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு உப்பு சேர்த்து வேக வைத்து எடுக்கவும்.
  2. வெந்த உருளைக்கிழங்கை தோல் நீக்கி எடுத்து கொள்ளவும்.
  3. உருளைக்கிழங்கை நன்றாக மசித்துக் கொள்ளவும்.
  4. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளிக்கவும்.
  5. நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  6. கருவேப்பிலை இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  7. மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.
  8. மசித்த உருளைக்கிழங்கை சேர்க்கவும்.
  9. சிறிது தண்ணீர் சேர்த்து வேக விடவும்.மிளகாய்த்தூள் சேர்க்கவும்.தேவையான உப்பு சேர்க்கவும்.
  10. உருளைக்கிழங்கில் மசாலா ஏறி தண்ணீர் வற்றியதும் அடுப்பில் இருந்து இறக்கவும்.
  11. அடுப்பில் தோசைக் கல்லை வைத்து தோசை ஊற்றவும்.
  12. வெண்ணெய் தடவி கொள்ளவும்.
  13. ஒரு கரண்டி உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து பரப்பவும்.
  14. தோசையை மடித்து பரிமாறவும்.
  15. சுவையான மசாலா தோசை தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்