வீடு / சமையல் குறிப்பு / இரவு உணவுகள் விருந்து தேங்காய் போளி மினி சாம்பார் இட்லி வரகரிசி பொங்கல் குதிரை வாலி கிச்சடி சம்பா கோதுமை ரவை இட்லி அவல் உப்புமா சாம்பார் தேங்காய் சட்னி வெங்காய சட்னி மற்றும் பூண்டுப்பால்

Photo of Dinner Feast by jothi durai at BetterButter
1
1
0(0)
0

இரவு உணவுகள் விருந்து தேங்காய் போளி மினி சாம்பார் இட்லி வரகரிசி பொங்கல் குதிரை வாலி கிச்சடி சம்பா கோதுமை ரவை இட்லி அவல் உப்புமா சாம்பார் தேங்காய் சட்னி வெங்காய சட்னி மற்றும் பூண்டுப்பால்

Sep-25-2018
jothi durai
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
50 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

இரவு உணவுகள் விருந்து தேங்காய் போளி மினி சாம்பார் இட்லி வரகரிசி பொங்கல் குதிரை வாலி கிச்சடி சம்பா கோதுமை ரவை இட்லி அவல் உப்புமா சாம்பார் தேங்காய் சட்னி வெங்காய சட்னி மற்றும் பூண்டுப்பால் செய்முறை பற்றி

குழந்தைகள் பெரியவர்கள் அனைவருக்கும் உகந்த உணவுகள்

செய்முறை டாக்ஸ்

 • శాఖాహారం
 • మీడియం/మధ్యస్థ
 • రాత్రి విందు
 • తమిళనాడు
 • ఆవిరికి
 • ప్రధాన వంటకం
 • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

 1. தேங்காய் போளி செய்ய
 2. கோதுமை மாவு ஒரு கப்
 3. தயிர் ஒரு ஸ்பூன்
 4. எண்ணை 3ஸ்பூன்
 5. தேங்காய் துருவல் ஒரு கப்
 6. வெல்லத் துருவல் கால் கப்
 7. ஏலக்காய் பொடி சிறிதளவு
 8. நெய் தேவைக்கேற்ப
 9. இட்லி மாவு ஒரு கப்
 10. சாம்பாருக்கு
 11. பாசிப்பருப்பு அரை கப்
 12. சிறிய வெங்காயம் 50 கிராம்
 13. தக்காளி-2
 14. சாம்பார் பொடி 2 ஸ்பூன்
 15. கடுகு உளுந்து சிறிதளவு
 16. பெருங்காயத்தூள் சிறிதளவு
 17. மல்லி கருவேப்பிலை சிறிதளவு
 18. குதிரைவாலி அரிசி அரை கப்
 19. பெரிய வெங்காயம் ஒன்று
 20. இஞ்சி பூண்டு பேஸ்ட் சிறிதளவு
 21. பச்சை மிளகாய் 2
 22. தக்காளி ஒன்று
 23. காரட் துருவல் சிறிதளவு
 24. கரம்மசாலா சிறிதளவு
 25. தேங்காய் பால் ஒன்றரை கப்
 26. எலுமிச்சை சாறு சிறிதளவு
 27. நெய் தேவைக்கேற்ப
 28. மல்லித்தழை சிறிதளவு
 29. வரகரிசி அரை கப்
 30. பாசிப் பருப்பு 50 கிராம்
 31. சீரகம் ஒரு ஸ்பூன்
 32. மிளகு சிறிதளவு
 33. பச்சை மிளகாய் 2
 34. இஞ்சி துருவியது சிறிதளவு
 35. கறிவேப்பிலை சிறிதளவு
 36. நெய் தேவைக்கேற்ப
 37. சம்பா கோதுமை ரவை ஒரு கப்
 38. புளித்த தயிர் ஒன்றரை கப்
 39. கடுகு உளுந்து சிறிதளவு
 40. மிளகாய்வற்றல் 2
 41. கறிவேப்பிலை சிறிதளவு
 42. எண்ணெய் 1 ஸ்பூன்
 43. கெட்டி அவல் அரை கப்
 44. சிறிய வெங்காயம் 50 கிராம்
 45. பச்சை மிளகாய் 2
 46. கடுகு உளுந்து சிறிதளவு
 47. மல்லி கருவேப்பிலை சிறிதளவு
 48. எண்ணெய் ஒரு ஸ்பூன்
 49. தேங்காய் துருவல் அரை கப்
 50. பொட்டுக்கடலை 50 கிராம்
 51. வறுத்த நிலக்கடலை சிறிதளவு
 52. பச்சை மிளகாய் 3
 53. பூண்டு 2
 54. கறிவேப்பிலை சிறிதளவு
 55. கடுகு உளுந்து சிறிதளவு
 56. எண்ணெய் ஒரு ஸ்பூன்
 57. உப்பு தேவைக்கேற்ப
 58. சிறிய வெங்காயம் 100 கிராம்
 59. தக்காளி-3
 60. புளி சிறிதளவு
 61. மிளகாய் தூள் இரண்டு ஸ்பூன்
 62. எண்ணெய் 4 ஸ்பூன்
 63. கடுகு சிறிதளவு
 64. உப்பு தேவைக்கேற்ப
 65. பால் 300 மில்லி
 66. பூண்டு 5

வழிமுறைகள்

 1. கோதுமை மாவுடன் ஒன்றரை ஸ்பூன் எண்ணெய் தயிர் சேர்த்து நன்கு பிசையவும்
 2. மாவை காற்று புகாதவாறு ஒரு மணி நேரம் மூடி வைக்கவும்
 3. சிறிதளவு நீரில் வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி வாணலியில் தேங்காய் துருவலுடன் சேர்த்து நன்கு கிளறவும்
 4. கலவை சற்று இறுகியதும் ஏலப்பொடி தூவி இறக்கவும்
 5. சிறிது ஆறியதும் பூரணத்தை உருண்டைகளாக்கி கொள்ளவும்
 6. சப்பாத்தி உருண்டை அளவு மாவை எடுத்துக் கொள்ளவும்
 7. உள்ளங்கையில் வைத்து விரித்து ஒரு பூரண உருண்டையை உள்ளே வைக்கவும்
 8. பின்பு மாவை எல்லா பக்கமும் மூடி உருண்டையாக்கி வைத்துக் கொள்ளவும்
 9. சிறிய வாழை இலையின் பின்புறம் எண்ணெய் தடவவும்
 10. உருண்டையை அதன்மேல் வைத்து கையால் மெல்லியதாக பரத்தவும்
 11. தோசைக்கல்லில் நெய் விட்டு மிதமான தீயில் இருபுறமும் சிவக்க சுட்டு எடுக்கவும்
 12. சுவையான தேங்காய் போளி ரெடி
 13. மினி இட்லி தட்டில் எண்ணெய் தடவி மாவை ஊற்றி வேக வைக்கவும்
 14. பாசிப்பருப்புடன் வெங்காயம் தக்காளி மஞ்சள் தூள் 2துளி எண்ணெய் சாம்பார் பொடி சேர்த்து வேக விடவும்
 15. எண்ணெயில் கடுகு உளுந்து கறிவேப்பிலை பெருங்காயம் தாளிக்கவும்
 16. வெந்த கலவையுடன் இதனை சேர்த்து தேவையான உப்பு சேர்த்து , 3 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்
 17. பின்பு 2 டீஸ்பூன் எண்ணெய் மல்லித்தழை சேர்க்கவும்
 18. மினி இட்லிகளை பவுலில் வைத்து சாம்பார் ஊற்றினால் சாம்பார் இட்லி ரெடி
 19. குதிரைவாலி அரிசியை அரை மணி ஊற வைத்துக் கொள்ளவும்
 20. குக்கரில் நெய் விட்டு பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் வதக்கவும்
 21. இஞ்சி பூண்டு விழுது தக்காளி சேர்த்து வதக்கவும்
 22. கரம் மசாலா உப்பு மஞ்சள் சேர்த்து நன்கு வதக்கவும்
 23. காரட் துருவலை சேர்த்துக் கொள்ளவும்
 24. தேங்காய் பால் சேர்க்கவும்
 25. ஊறிய அரிசியை சேர்த்து ஒரு விசில் வைக்கவும்
 26. மூன்று நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும்
 27. இறக்கியவுடன் எலுமிச்சை சாறு நெய் சேர்த்து நன்கு கிளறவும்
 28. குதிரைவாலி கிச்சடி ரெடி
 29. வரகரிசியை அரை மணி ஊற விடவும்
 30. பாசிப்பருப்பை சற்று வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும்
 31. கடுகு எண்ணெய் விட்டு சீரகம் பச்சை மிளகாய் சேர்க்கவும்
 32. அரைகுறையாக பொடித்த மிளகு இஞ்சி துருவல் கறிவேப்பிலை சேர்க்கவும்
 33. நன்கு வதக்கியபின் 2 கப் நீர் சேர்க்கவும்
 34. வரக் அரிசியையும் பாசிப்பருப்பையும் சேர்க்கவும்
 35. உப்பு சரிபார்த்து குக்கரை மூடவும்
 36. ஒரு விசில் வந்ததும் மூன்று நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும்
 37. இறக்கிய பின்பு தேவையான நெய்விட்டு நன்கு கிளறவும்
 38. வரகரிசி பொங்கல் ரெடி
 39. கோதுமை ரவையை சற்று வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும்
 40. பின்பு அதனை தயிரில் உப்பு சேர்த்து அரைமணி ஊற விடவும்
 41. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு உளுந்து வெங்காயம் வற்றல் கறிவேப்பிலை தாளிக்கவும்
 42. இரண்டு கலவையையும் சேர்த்து சற்று கெட்டியாக கலக்கவும்
 43. இட்லி தட்டில் எண்ணெய் தடவி மாவை ஊற்றவும்
 44. ஆறிலிருந்து எட்டு நிமிடங்கள் வரை வேக வைத்து எடுக்கவும்
 45. சுவையான சம்பா கோதுமை ரவை இட்லி தயார்
 46. கெட்டி அவலை கழுவி 2 நிமிடம் ஊற வைக்கவும்
 47. வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு உளுந்து பொடியாக நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்க்கவும்
 48. ஊறிய அவல் தேவையான உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்
 49. மல்லித்தழை தூவவும்
 50. உடனடி அவல் உப்புமா ரெடி
 51. தேங்காய் சட்னிக்கு கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் சற்று பரபரவென அரைக்கவும்
 52. பின்பு எண்ணெயில் கடுகு உளுந்து கருவேப்பிலை தாளித்து சேர்க்கவும்
 53. வெங்காய சட்னி
 54. சிறிய வெங்காயம் தக்காளி புளி மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
 55. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளிக்கவும்
 56. பின்பு அரைத்த கலவையை சேர்த்து மிளகாய் பொடி சேர்க்கவும்
 57. நன்கு வதக்கிய பின்பு சிறிது நீர் சேர்த்து 5 நிமிடம் சிம்மில் வைத்து கொதிக்க விடவும்
 58. நன்கு எண்ணை தெளி ந்த பின்பு இறக்கவும்
 59. சற்று ஆறிய பிறகு உப்பு சேர்க்கவும்
 60. வெங்காய சட்னி தயார்
 61. பாலில் பூண்டு பற்களை சேர்த்து கொதிக்க விடவும்
 62. மிதமான தீயில் பூண்டு நன்கு வேகும் வரை கொதிக்க விடவும்
 63. பூண்டு பால் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்