வீடு / சமையல் குறிப்பு / பனானா சட்னி

Photo of Banana Chutney by Fathima Sujitha at BetterButter
284
1
0.0(0)
0

பனானா சட்னி

Sep-25-2018
Fathima Sujitha
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பனானா சட்னி செய்முறை பற்றி

தேங்காய் சட்னி , தக்காளி சட்னி னு ஒரே அதே சட்னி செய்து Bore அடித்தவர்களுக்கு ...இந்த சட்னி வித்தியசமான ருசியில் இருக்கும்...சீக்கிரமாக செய்து முடிக்க கூடியது... இனிப்பும் காரமும் கலந்து ஆரோக்கியமான பனானா சட்னி ....!!!

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • நார்த் இந்தியன்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வாழைப்பழம் (நான் பச்சை வாழைப்பழம் எடுத்துக் கொண்டுள்ளேன்) - 1
  2. ஓமம் - 1/2 டீஸ்பூன்
  3. நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன்
  4. நறுக்கிய பூண்டு - 1 டீஸ்பூன்
  5. மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
  6. மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
  7. மல்லி தூள் - 1/2 டீஸ்பூன்
  8. சாட் மசாலா - 1/4 டீஸ்பூன்
  9. நெய் - தேவையான அளவு
  10. உப்பு - தேவையான அளவு
  11. சர்க்கரை -1 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. முதலில் வாழைப் பழத்தை சிறு துண்டுகளாக கட் செய்து கொள்வும்.
  2. அவற்றை மிக்ஸில் போட்டு நன்கு நைஸாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
  3. ஒரு கடாயில் நெய் ஊற்றவும்.
  4. ஓமம் யை உள்ளங்கையில் வைத்து நன்கு கசக்கி சேர்த்து வதக்கவும்.
  5. இஞ்சி, பூடு சேர்த்து வதக்கவும்.
  6. நன்கு வதங்கியதும், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் சேர்க்கவும்.
  7. அரைத்து வைத்துள்ள வாழைப்பழ பேஸ்டை இதனுடன் சேர்த்து கிளறவும்.
  8. சிறிதளவு தண்ணீர் ஊற்றி 2 நிமிடங்கள் கிளறவும்.
  9. தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
  10. சர்க்கரை சேர்த்து கிளறவும்.
  11. இறுதியாக சாட் மசாலா சேர்த்து நன்கு கிளறி அடுப்பை ஆப் செய்யவும்.
  12. வித்தியாசமான இனிப்பு மற்றும் காரம் கலந்த ருசியில் பனானா சட்னி தயார் ..!!
  13. இட்லி, தோசை, சப்பாத்தி, பிரட் ரோஸ்ட், ஆப்பம் இவைகளுடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்