வீடு / சமையல் குறிப்பு / சவுத் இந்தியன் டின்னர் தாளி

Photo of Unique South Indian dinner thali by Pinky Srini at BetterButter
1696
2
0.0(0)
0

சவுத் இந்தியன் டின்னர் தாளி

Sep-25-2018
Pinky Srini
600 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
120 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சவுத் இந்தியன் டின்னர் தாளி செய்முறை பற்றி

என்னுடைய பிரியமான தென்னிந்திய இரவு வகை உணவுகளின் தொகுப்பு : பன்னீர் பட்டர் மசாலா தோசை, குங்குமப்பூ கேசரி , கடிபு இட்லி, மங்களூர் சாம்பார், இட்லி மிளகாய் பொடி இடியாப்பம், தேங்காய் சட்னி, கார மிளகாய் சட்னி, போண்டா சூப்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • சௌத்இந்தியன்
  • பான் பிரை
  • சிம்மெரிங்
  • பிரெஷர் குக்
  • பாய்ளிங்
  • ஸ்டீமிங்
  • ஃபிரையிங்
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மங்களூர் சாம்பார்:
  2. தாளிக்க :
  3. பெருங்காயம் ஒரு சிட்டிகை
  4. எண்ணெய் 2tsp
  5. கடுகு 1/2tsp
  6. உளுத்தம் பருப்பு 3/4tsp
  7. வெந்தயம் 5
  8. துருவிய தேங்காய் 1/4கப் + 2tsp
  9. காஷ்மீர் மிளகாய் 4
  10. சீரகம் 1tsp (தாளிக்கவும் சேர்த்து)
  11. முழு தனியா 2tsp
  12. மஞ்சள் தூள் 1/4tsp
  13. புளி 1/2tsp
  14. வெல்லம் 2tsp
  15. துவரம் பருப்பு 1/4கப்
  16. மஞ்சள் பூசணி 1கப்
  17. கடுபு இட்லி :
  18. உப்பு தேவக்கேற்ப
  19. பலாப்பழம் இலை 32
  20. அவல் 1tsp
  21. இட்லி ரவை 1/2 கப்
  22. முழு உளுத்தம் பருப்பு 3/4கப்
  23. இட்லி மிளகாய் தூள் இடியாப்பம் :
  24. கருவேப்பிலை ஒரு கை நிறைய
  25. நல்லெண்ணெய் 3tsp
  26. வேகவைத்து உலர்த்திய இடியாப்பம் 1கப்
  27. போண்டா சூப் :
  28. (சூப்) :
  29. பெருங்காயம் 1 சிட்டிகை
  30. உளுத்தம் பருப்பு 1/2tsp
  31. கடுகு 1/4tsp
  32. எலுமிச்சை சாறு 1tsp
  33. துருவிய தேங்காய் 2tsp
  34. கொத்தமல்லி 1tsp
  35. கருவேப்பிலை 8
  36. பாசி பருப்பு 1tsp
  37. மஞ்சள் தூள் 1/4tsp
  38. பச்சை மிளகாயை 1
  39. இஞ்சி 1/2tsp
  40. பூண்டு 1/2tsp
  41. நசுக்கிய கருப்பு மிளகு 1/2tsp
  42. துவரம் பருப்பு 1tsp
  43. மசூர் டால் 1tsp
  44. தக்காளி 1/2
  45. எண்ணெய் 1tsp
  46. சீரகம் 1/2tsp
  47. (போண்டா)
  48. உளுந்து 1/2கப்
  49. கருவேப்பிலை 8
  50. இஞ்சி 1/4tsp
  51. உடைத்த மிளகு 1/2tsp
  52. அரிசி மாவு 1tsp
  53. சோடா உப்பு ஒரு சிட்டிகை
  54. பன்னீர் பட்டர் masala தோசை :
  55. முந்திரி 4
  56. கசூரி மேதீ 1/2tsp
  57. கொத்தமல்லி 1tsp
  58. உப்பு
  59. கரம் மசாலா பவுடர் 1/4tsp
  60. மிளகாய் தூள் 1/4tsp
  61. காஷ்மீர் வரமிளகாய் 2
  62. வெண்ணெய் 2tbsp
  63. இஞ்சி பூண்டு விழுது 1tsp
  64. ஏலக்காய் 1
  65. வெங்காயம் 1
  66. தக்காளி 2
  67. பன்னீர் 1/2கப்
  68. தோசை மாவு 1கப்
  69. உடைத்த கோதுமை குங்குமப்பூ கேசரி:
  70. முந்திரி 4
  71. நெய் 3tsp
  72. குங்குமப்பூ 1 சிட்டிகை
  73. ஏலக்காய் தூள் 1 சிட்டிகை
  74. தண்ணீர் 3/4கப்
  75. சர்க்கரை 1 /4கப்
  76. உடைத்த கோதுமை 1/4கப்
  77. கார சட்னி :
  78. நல்லெண்ணெய் 2tbsp
  79. உளுத்தம் பருப்பு 1/4 tsp
  80. கடுகு 1சிட்டிகை
  81. சின்ன வெங்காயம் 2
  82. பூண்டு 4
  83. மிளகாய் 3
  84. தக்காளி 1/2 பழம்
  85. தேங்காய் கெட்டி சட்னி :
  86. உப்பு
  87. 2 பூண்டு
  88. இஞ்சி 1/4tsp
  89. பச்சை மிளகாய் 1
  90. தேங்காய் 1/4கப்
  91. பொட்டு கடலை 3/4tsp

வழிமுறைகள்

  1. தோசை மாவு 5 : 1 என்ற வீதம் உளுத்தம் பருப்பு மற்றும் இட்லி அரிசி கலந்து தனி தனியாக ஊறவைத்து ஆடி கொள்ளவும்
  2. பணீர் மசாலா செய்ய :
  3. கடாயில் நெய் ஊற்றவும்
  4. அதில் வெங்காயம் இஞ்சி பூண்டு மிளகாய் சேர்த்து வதக்கவும்
  5. இதனுடன் ஏலக்காய் முந்திரி சேர்க்கவும்
  6. பின் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்
  7. இதனை ஆறவைத்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்
  8. மீண்டும் கடாயில் வெண்ணை சேர்த்து இந்த அரைத்த விழுது சேர்த்து நன்கு வதக்கவும்
  9. இதில் உப்பு மிளகாய் தூள் கரம் மசாலா தூள் சர்க்கரை ஒரு சிடிகை மற்றும் பனீர் சேர்க்கவும்
  10. நன்கு பச்சை வாடை ஏதுமின்றி வருகையில் கசூரி மெதி சேர்த்து கலந்து இறக்கவும்
  11. கல் சூடான பின்பு மெலிதாக தோசை சுட்டு நெய் ஊற்றி இந்த பன்னீர் கலவை அதன் மீது வைத்து மூடவும்
  12. தோசை தயார்
  13. கார சட்னி:
  14. மிக்ஸியில் தக்காளி வெங்காயம் மிளகாய் பூண்டு உப்பு சேர்த்து நன்கு அரைக்கவும்
  15. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு, கருவேப்பிலை சேர்த்து பின் இந்த கலவை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்
  16. தேங்காய் சட்னி :
  17. மிக்ஸியில் தேங்காய் பொட்டு கடலை பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு உப்பு சேர்த்து அரைக்கவும்
  18. அதில் தாளித்த கடுகு உளுத்தம் பருப்பு சேர்க்கவும்
  19. குங்குமப்பூ கேசரி :
  20. வாணலியில் நெய் சேர்த்து முந்திரி பொன் நிறமாக வறுத்து கொள்ளவும்
  21. பின் மீதமுள்ள நெய்யில் உடைத்து கோதுமை வாசம் வரும் வரை வறுத்து கொள்ளவும். தனியாக எடுத்து வைக்கவும்
  22. அதே கடாயில் குங்குமப்பூ,தண்ணீர் சேர்த்து கொதி வந்ததும் கோதுமை சேர்த்து நன்கு கலக்கவும்
  23. இதை தட்டு பொட்டு மூடி வைக்கவும்
  24. நன்கு வெந்த பிறகு சர்க்கரை ஏலக்காய் தூள் சேர்க்கவும்
  25. அனைத்தும் நன்கு சேர்ந்து கடாயில் ஒட்டாமல் வரும்பொழுது அடுப்பை நிறுத்தி முந்திரி சேர்க்கவும்
  26. மிளகாய் பொடி இடியாப்பம் :
  27. இடியப்பதை 1/2tsp எண்ணெய் கலந்து பிசரவும்
  28. வாணலியில் எண்ணெய் சேர்க்கவும் . காய்ந்ததும் அதில் கருவேப்பிலை மற்றும் இட்லி பொடி சேர்த்து நன்கு கலக்கவும்
  29. இதில் இடியாப்பதை உதிர்த்து விடவும்
  30. நன்கு கலந்தவுடன் அடுப்பை நிறுத்தவும்
  31. போண்டா சூப் : (போண்டா)
  32. உளுந்தை2 மணி நேரம் ஊற வைக்கவும்
  33. மிக்ஸியில் குறைந்த அளவு தண்ணீர் சேர்க்காமல் (2tsp) அரைத்து கொள்ளவும்
  34. அதில் சோடா உப்பு பச்சை மிளகாய் கறிவேபபிலை இஞ்சி அரிசி மாவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்
  35. எண்ணெய் சூடானதும் சின்ன சின்ன உருண்டை வடிவில் மிதமான சூட்டில் பொரித்து எடுக்கவும்
  36. (சூப்)
  37. குகேர் எண்ணெய் சேர்த்து அதில்கடுகு உளுத்தம் பருப்பு பெருங்காயம் ஜீரகம் (1/4tsp) இஞ்சி மிளகு மிளகாய் சேர்த்து நன்கு பொரியவிட்டு வதக்கவும்
  38. பின் அதில் அனைத்து பருப்பு சேர்த்து கலக்கி தக்காளி சேர்க்கவும்
  39. இதில் 1கப் தண்ணீர் ஊற்றி 4 விசில் வந்ததும் இறக்கவும்
  40. பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மெலிதாக சூப் போன்று வந்தவுடன் எலுமிச்சை. தேங்காய் துருவல் உப்பு சேர்த்து பொறித்த போண்டா சேர்த்து கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும்
  41. கடுபு இட்லி :
  42. 2 மணி நேரம் ஊற வைத்த உளுந்தை அவல் சேர்த்து நன்கு அரைக்கவும்
  43. இட்லி ரவையை சிறிது தண்ணீர் சேர்த்து அவற்றை உறியும் வரை குறைந்தது பத்து நிமிடம் விடவும்
  44. பின் அதில் அரைத்த உளுந்து சேர்த்து 8மணி நேரம் உப்பும் வரை விடவும்
  45. பின் பலா மரம் இலைகளை கப் போன்று செய்து கொள்ளவும்
  46. அதில் இட்லி மாவு ஊற்றி இட்லி கூகுர் உள்ளே வைத்து வேக வைக்கவும்
  47. கத்தி விட்டு இட்லி பார்ப்பது போன்று செக் செய்து எடுக்கவும்
  48. சிறிது நேரம் பின்பு இலை. அதில் இருந்து பிரித்து எடுக்கவும்
  49. மங்களூர் சாம்பார்:
  50. ஒரு கடாயில் என்னை ஊற்றி சீரகம் முழு மிளகாய் முழு மல்லி வெந்தயம் உளுத்தம்பருப்பு சேர்த்து நன்கு வாசம் வரும் வரை வதக்கவும்
  51. பின் அதில் துருவிய தேங்காய் சேர்க்கவும்
  52. இவற்றை மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்
  53. கூகேர் பருப்பு வெல்லம் புளி மஞ்சள் உப்பு தண்ணீர் சேர்த்து 4 விசில் விட்டு இறக்க வேண்டும்
  54. பருப்பை மசித்து கொள்ளவும்
  55. அதே கூகெர் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம் பருப்பு பெருங்காயம் ஜீரகம் தாளித்து கொள்ளவும்
  56. பின் நறுக்கிய பூசணிக்காய் சேர்க்கவும்
  57. பின் அதில் அரைத்த கலவை சேர்த்து 2 நிமிடம் வதக்கி தண்ணீர் மற்றும் பருப்பு கலவை சேர்த்து நன்கு கொதி வந்தவுடன் இனிப்பு புள்ளிப்பு பார்த்து சரி செய்யவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்