வீடு / சமையல் குறிப்பு / சோயா சப்பாத்தி வித் வெஜ் கடாயி

Photo of Soya chapathi with veg kadaai by Selvi N at BetterButter
274
1
0.0(0)
0

சோயா சப்பாத்தி வித் வெஜ் கடாயி

Sep-25-2018
Selvi N
50 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சோயா சப்பாத்தி வித் வெஜ் கடாயி செய்முறை பற்றி

இந்த சோயா பீன்ஸ் சப்பாத்தி மற்றும் வெஜ் கடாயி முற்றிலும் எனர்ஜி நிறைந்தது. சோயா சப்பாத்தி புரதம் நிறைந்து உள்ளது.வெஜ் கடாயி அனைத்து காய்கறியின் சத்துகள் நிறைந்து இருக்கிறது. இந்த ரெசிபி 100 % சத்துக்கள் மற்றும் புரதம் நிறைந்தது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • மேற்கு வங்காளம்
  • ஃபிரையிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சோயா சப்பாத்தி செய்ய
  2. சோயா பீன்ஸ் அரை கப்
  3. சோயா சங்ஸ் 1/4 கப்
  4. கோதுமை மாவு அரை கப்
  5. எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு
  7. வெஜ் கடாயி செய்ய
  8. பெரிய வெங்காயம் 2
  9. தக்காளி 3
  10. முந்திரி 5
  11. எண்ணை தேவையான அளவு
  12. பட்டை 1
  13. கிராம்பு 4
  14. ஏலக்காய் 3
  15. பிரிஞ்சி இலை 1
  16. இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன்
  17. மிளகாய்த்தூள் 1.5 டீஸ்பூன்
  18. மல்லி தூள் ஒரு டீஸ்பூன்
  19. கரம் மசாலா அரை டீஸ்பூன்
  20. உப்பு தேவையான அளவு
  21. கசூரி மேத்தி ஒரு டீஸ்பூன்
  22. ஃப்ரஷ் கிரீம் 2 டேபிள்ஸ்பூன்
  23. பனீர் 100 கிராம்
  24. வேகவைத்த கேரட் பீன்ஸ் காலிஃப்ளவர் ஒரு கப்
  25. பச்சை பட்டாணி வேகவைத்தது கால் கப்
  26. பச்சை குடைமிளகாய் பாதியளவு

வழிமுறைகள்

  1. சோயா சப்பாத்தி செய்ய
  2. சோயாபீனை நன்றாக சுத்தம் செய்துவிட்டு தண்ணீரில் 8 மணி நேரம் ஊற வைக்கவும்
  3. சோயா சங்கை சுடு தண்ணீரில் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைத்து எடுக்கவும்
  4. இரண்டையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்
  5. இதனுடன் தேவையான அளவிற்கு கோதுமை மாவு உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து எடுத்துக்கொள்ளவும்
  6. இந்த மாவிலிருந்து சிறு உருண்டை எடுத்து சப்பாத்தியாக விரித்துக் கொள்ளவும்
  7. இந்த சப்பாத்தி மாவை கல்லில் போட்டு சப்பாத்தியாக சுட்டு எடுத்து நெய் தடவி வைத்துக் கொள்ளவும்
  8. வெஜ் கடாய் செய்ய
  9. ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி வெங்காயம் தக்காளி முந்திரி மூன்றையும் சேர்த்து நன்றாக வதக்கி ஆறியதும் அரைத்து எடுத்துக் கொள்ளவும்
  10. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்
  11. இப்போது அரைத்து வைத்துள்ள விழுது மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்
  12. இந்த கலவை நன்றாக கொதி வந்த உடன் அதனுடன் கசூரி மேத்தி, மல்லி தூள், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும்
  13. இப்போது அதனுடன் ஃப்ரஷ் கிரீம் மற்றும் பன்னீர் சேர்த்து 5 நிமிடம் வேக வைக்கவும்
  14. 5 நிமிடம் கழித்து குடைமிளகாய், வேக வைத்து வைத்துள்ள அனைத்து காய்கறிகளையும் சேர்த்து நன்றாக கலக்கி 5 நிமிடம் மூடி வைக்கவும்
  15. வெஜ் கடாய் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்