BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / இடியாப்ப பிரியாணி தக்காளி பச்சடி பொட்டுக்கடலை தயிர் சம்பல்

Photo of String Hoppers Biryani with Tomato Jam and Bengal Gram Curd Sambal by Hameed Nooh at BetterButter
0
3
0(0)
0

இடியாப்ப பிரியாணி தக்காளி பச்சடி பொட்டுக்கடலை தயிர் சம்பல்

Sep-25-2018
Hameed Nooh
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

இடியாப்ப பிரியாணி தக்காளி பச்சடி பொட்டுக்கடலை தயிர் சம்பல் செய்முறை பற்றி

சுவையான இடியாப்ப பிரியாணியோடு தக்காளி பச்சடி மற்றும் தயிர் சம்பல் இரவு நேர விருந்திற்கு ஏற்றது..

செய்முறை டாக்ஸ்

  • మీడియం/మధ్యస్థ
  • పండుగలాగా
  • తమిళనాడు
  • పెనం పై వేయించటం/పాన్ ఫ్రై
  • చిన్న మంట పై ఉడికించటం
  • మిళితం
  • ప్రాథమిక వంటకం
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. இடியாப்பம் பிரியாணி செய்வதற்கு :
  2. மட்டன் அரை கிலோ
  3. இஞ்சி பூண்டு விழுது இரண்டு மேசைக்கரண்டி
  4. தயிர் ஒரு கப்
  5. ரம்பை (பாண்டன்) இலை ஒன்று
  6. பட்டை ஒரு சிறிய துண்டு
  7. கிராம்பு-2
  8. ஏலம் 3
  9. பல்லாரி 2
  10. பச்சை மிளகாய் ஐந்து
  11. நறுக்கிய புதினா அரை கப்
  12. பாதாம் பிஸ்தா மற்றும் முந்திரி அரை கப்
  13. உலர் திராட்சை 50 கிராம்
  14. நெய் 2 மேசைக்கரண்டி
  15. எண்ணெய் தேவைக்கு
  16. உப்பு சுவைக்கேற்ப
  17. தக்காளி பச்சடி செய்வதற்கு :
  18. தக்காளி அரை கிலோ
  19. பச்சை மிளகாய் ஒன்று
  20. சர்க்கரை 150 கிராம்
  21. நெய் ஒரு மேசைக்கரண்டி
  22. பட்டை சிறிய துண்டு
  23. ரோஸ் வாட்டர் 5 மில்லி
  24. முந்திரி பாதாம் 25 கிராம்
  25. உலர் திராட்சை 25 கிராம்
  26. பொட்டுக்கடலை தயிர் சமையல் செய்வதற்கு :
  27. பொடித்த பொட்டுக்கடலை கால் கப்
  28. தேங்காய் துருவல் கால் கப்
  29. கெட்டித் தயிர் ஒரு கப்
  30. பச்சை மிளகாய் ஒன்று
  31. எலுமிச்சை ஊறுகாய் சிறிது
  32. வாசித்தோர் ஒரு மேஜைக்கரண்டி
  33. காய்ந்த மிளகாய் ஒன்று
  34. உப்பு சுவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. இடியாப்ப பிரியாணி செய்முறை : பாதாம் பிஸ்தா ஆகியவற்றை தோல் நீக்கி முந்திரியுடன் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்
  2. தேங்காய் துருவலை அரைத்து கெட்டியான பாலை பிழிந்து எடுக்கவும்
  3. இறைச்சியை சுத்தப்படுத்தி அதில் தயிர் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் சிறிதளவு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்
  4. பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் சிறிதளவு சேர்த்து ஏலம் பட்டை கிராம்பு இஞ்சி பூண்டு விழுது தயிர் ரம்பை இலை புதினா சேர்த்து வதக்கவும்
  5. பிரட்டி வைத்த இறைச்சியை சேர்த்து வேக விடவும்.
  6. இறைச்சியோடு சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும்.
  7. இனி அரைத்து வைத்த பாதாம் பிஸ்தா முந்திரியை சேர்த்து வேகவிடவும்
  8. கெட்டியான தேங்காய்ப்பால் அதோடு சிறிதளவு தண்ணீர் ஊற்றி இடியாப்பத்தை சிறிது சிறிதாக உதிர்த்து போட்டு நன்றாக கிளறவும்
  9. தண்ணீர் தன்மை வற்றி இடியாப்பம் நன்றாக கெட்டியானதும் சிறிது பிஸ்தா பாதாம் மற்றும் முந்திரியை நெய்யில் வறுத்து மேலே தூவி பரிமாறவும்
  10. தக்காளி பச்சடி செய்யும் முறை : தக்காளி மற்றும் பச்சை மிளகாயை நன்றாக கழுவி மிருதுவாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
  11. அடி கனமான பாத்திரத்தில் தக்காளி பச்சை மிளகாய் கலவையை ஊற்றி வேகவிடவும்
  12. சிறிது நேரத்தில் நிறம் மற்றும் மணம் மாறியதும் சர்க்கரை சேர்த்து நன்றாக கெட்டியாகும் வரை கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்
  13. மற்றொரு கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி பருப்பு நறுக்கிய பாதாம் உலர் திராட்சை ஆகியவற்றை வறுத்து ஜாமில் கொட்டி சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து கிளறிவிட்டு இறக்கவும்
  14. பொட்டுக்கடலை தயிர் சம்பல் செய்முறை : ஒரு பாத்திரத்தில் பொடித்த பொட்டுக்கடலை தேங்காய் துருவல் நறுக்கிய பச்சை மிளகாய் எலுமிச்சை ஊறுகாய் மாசி தூள் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிரட்டவும்
  15. காய்ந்த மிளகாயை தனலில் சிறிது வாட்டி அதனையும் சம்பலோடு சேர்க்கவும்
  16. தயிர் எலுமிச்சை ஊறுகாய் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து பந்துபோல் சிறிது சிறிதாக பிடிக்கவும்
  17. சுவையான இடியாப்ப பிரியாணி பொட்டுக்கடலை தயிர் சம்பல் மற்றும் தக்காளி பச்சடி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்