வீடு / சமையல் குறிப்பு / ஆரோக்கியம் நிறைந்த குழந்தைகளை கவரும் இரவு விருந்து

Photo of Healthy and Childrens like Dinner Party by Fathima Sujitha at BetterButter
316
2
0.0(0)
0

ஆரோக்கியம் நிறைந்த குழந்தைகளை கவரும் இரவு விருந்து

Sep-25-2018
Fathima Sujitha
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஆரோக்கியம் நிறைந்த குழந்தைகளை கவரும் இரவு விருந்து செய்முறை பற்றி

சத்தான உணவை எடுத்துக்கொள்வதும்,குழந்தைகளுக்கு பிடித்த விதத்திலும், இரவில் மிகக்குறைவான விரைவில் செரிமானம் ஆகக் கூடிய உணவை எடுப்பதுமாக இருக்க வேண்டும் .... ஆனால் தற்போது இது மீறப்படுகிறது...காய்கறி நிறைந்த உணவு ,தண்ணீயான உணவுகள் ,பழங்கள்,பால் சேர்ந்த உணவுகளை சாப்பிட்டு இரவு விருந்தை முடித்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. மேலுல் இரவில் ஆழ்ந்த தூக்கம் வருவதற்கும், மலச்சிக்கல் இல்லாமல் இருப்பதற்கு இது உதவிகரமாக இருக்கும்...இத்தனையும் நிறைந்த இரவு விருந்தை எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்...!!!

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பீட்ரூட் தோசை :
  2. தோசை மாவு - தேவையான அளவு
  3. பீட்ரூட் - 1
  4. உப்பு -தேவையான அளவு
  5. கேரட் - அழகு படுத்த
  6. கார சட்னி :
  7. தேங்காய் - 1 மூடி
  8. பொட்டுக் கடலை - 2 டீஸ்பூன்
  9. காய்ந்த மிளகாய் -காரத்திற்கு ஏற்றார் போல
  10. புளி - சிறிதளவு
  11. கறிவேப்பில்லை - சிறிதளவு
  12. கடுகு - 1/4 டீஸ்பூன்
  13. வெங்காயம் - 1
  14. உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
  15. எண்ணெய் - தேவையான அளவு
  16. உப்பு -தேவையான அளவு
  17. கோழி குஞ்சி இட்லி :
  18. இட்லி - 1
  19. கேரட் - அழகு படுத்த
  20. தண்ணீர் - தேவைக்கு
  21. அவல் பொங்கல் :
  22. அவல் - 1 கப்
  23. வெல்லம் - 1/2 கப்
  24. பால் - 1 கப்
  25. ஏலக்காய் - தேவையான அளவு
  26. முந்திரி, கிஸ்மிஸ், பாதாம் - தேவையான அளவு
  27. நெய் - தேவையான அளவு
  28. உப்பு - ஒரு சிட்டிக்கை
  29. மேங்கோ மில்க் சேக் :
  30. மாம்பழம் - 1
  31. பால் - தேவையான அளவு
  32. தேன் - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பீட்ரூட் தோசை : முதலில் பீட்ரூடை தோல் நீக்கி கழுவி சிறு துண்டுகளாக கட் செய்து கொள்ளவும்.
  2. அவற்றை மிக்ஸியில் போட்டு நன்கு நைஸாக அரைத்து கொள்ளவும்.
  3. தேவையான அளவு தோசை மாவு எடுத்து கொண்டு அதில் அரைத்த விழுதை சேர்க்கவும்.
  4. உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
  5. தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி தோசையாக சுட்டு, இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.
  6. பரிமாறும் தட்டில் தோசையை வைத்து இரண்டு கேரட் துண்டுகள் மற்றும் பீட்ரூட் துருவல்களை வைத்து அழகுப் படுத்தவும்.
  7. ஆரோக்கியமான பீட்ரூட் தோசை தயார்...!!
  8. கார சட்னி : தேங்காய், காய்ந்த மிளகாய், பொட்டுக்கடலை, புளி, கறிவேப்பில்லை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  9. அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் மாற்றி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தண்ணீயாக சட்டியை உப்பு போட்டு கரைத்து கொள்ளவும்.
  10. பின் ஒரு கடாயில், எண்ணெய் ஊற்றி, கடுகு சேர்க்கவும்.
  11. உளுத்தம் பருப்பு சேர்த்து வதக்கவும்.
  12. கறிவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.
  13. வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
  14. கரைத்து வைத்துள்ள தேங்காய் சட்னி கலவையை ஊற்றவும்.
  15. உப்பு சேர்த்து கிளறி ஒரு கொதி வந்ததும் அடுப்பை ஆப் செய்யவும்.
  16. கோழி குஞ்சி இட்லி : இது நம்முடைய படைப்பாற்றாலை ஒத்தது ... குழந்தைகளுக்காக செய்யப்படுவது...
  17. ஒட்டுவதற்கு தண்ணீரை பயன்படுத்தி இட்லியை வைத்து செய்ய வேண்டும்.
  18. அவல் பொங்கல் : முதலில் அவலை தண்ணீர் விட்டு கழுவி அரிசி அரிப்பதை போல செய்து எடுத்துக் கொள்ளவும். ( சில நேரம் அவலில் கல் இருக்கும் அதற்காக இவ்வாறு செய்கிறோம்).
  19. ஒரு கடாயில் பாலை ஊற்றி காய்ச்சி கொதி வந்ததும், அவலை சேர்த்து வேக வைக்கவும்.
  20. கட்டி பிடிக்காமல் கிளறவும்.
  21. மிதமான தீயில் மூடி போட்டு வேக விடவும்...அவல் சீக்கிரமே வெந்து விடும்.
  22. இதற்கிடையில், பொடித்த வெல்லத்தை தண்ணீரை சேர்த்து கரைத்து இளம் பாகு பதம் வந்ததும், அவல் பொங்கலில் கொட்டி கிளறவும்.
  23. ஒரு சிட்டிகை உப்பு , ஏலக்காய் தூள் சேர்க்கவும்.
  24. இறுதியாக நெய்யில் பொரித்த முந்திரி கிஸ்மிஸ் பாதாமை சேர்த்து கிளறவும்.
  25. ருசியான அவல் பொங்கல் ரெடி...!!
  26. மேங்கோ மில்க் சேக் : பழுத்த மாம்பழத்தை தோல் நீக்கி சிறு துண்டுகளாக கட் செய்து எடுத்துக் கொள்ளவும்.
  27. மிக்ஸியில் மாம்பழ துண்டுகளை சேர்த்து தேவையான அளவு பால் சேர்த்து தேன் ஊற்றி ஐஸ்கட்டிகள் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  28. அரைத்த மாம்பழ மில்க் சேக்கை கிளாஸ்யில் ஊற்றி பரிமாறவும். ஐஸ்க்ரீம் சேர்த்தும் பரிமாறலாம்...!!
  29. ஆரோக்கியம் நிறைந்த குழந்தைகளை கவரும் இரவு விருந்து அருமையாக தயார் ...!!!

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்