வீடு / சமையல் குறிப்பு / ஆரோக்கியமான பருத்திப்பால்

Photo of Healthy Cotton Seed Milk by Hameed Nooh at BetterButter
634
3
0.0(0)
0

ஆரோக்கியமான பருத்திப்பால்

Sep-25-2018
Hameed Nooh
360 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஆரோக்கியமான பருத்திப்பால் செய்முறை பற்றி

பருத்திப்பால் பல்வேறு மூலிகை குணங்களை உள்ளடக்கியது.. இளமையை காக்க வல்லது. இரவு நேரத்தில் இதை பருகுவதால் சீரான நித்திரையை பெற முடியும் என்பார்கள்.

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பருத்திவிதை - 50 கிராம்
  2. அரிசிமாவு - 2 மேசைக்கரண்டி
  3. கருப்பட்டி -100 கிராம்
  4. தேங்காய் பால் - அரைமூடி
  5. சுக்கு - சிறிய துண்டு
  6. ஏலக்காய் - 2
  7. முந்திரி - 10
  8. நெய் - 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. பருத்திவிதையை 3 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து பால் எடுக்கவும்.
  2. கருப்பட்டியை இடித்து சிறிதளவு  தண்ணீரில் காய்ச்சி வடிகட்டவும்
  3. பருத்திவிதைப்பாலை அதை போன்று இருமடங்கு தண்ணீர் ஊற்றி காய்ச்சி ஒரு கொதி வந்ததும் வடிகட்டிய கருப்பட்டி மற்றும் தேங்காய்ப்பால் ஊற்றி காய்ச்சவும்.
  4. பால் கொதிக்கும் போது அரிசி மாவில் தண்ணீர் சேர்த்து கரைத்து ஊற்றி 2 நிமிடங்கள் கிளறி இறக்கவும்.
  5. முந்திரியை நெய்யில் வறுத்து சேர்க்கவும்.
  6. இறுதியாக ஏலக்காய் சுக்கை பொடியாக்கி சேர்த்து சூடாக பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்