வீடு / சமையல் குறிப்பு / சென்னை ஸ்பெஷல் வடகறி

Photo of Chennai Special Vadacurry by Jayanthi kadhir at BetterButter
0
1
0(0)
0

சென்னை ஸ்பெஷல் வடகறி

Sep-26-2018
Jayanthi kadhir
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

சென்னை ஸ்பெஷல் வடகறி செய்முறை பற்றி

Vadacurry is a chennai special delicacy which can be served with idly,dosa, poori and Aapam.

செய்முறை டாக்ஸ்

 • శాఖాహారం
 • తేలికైనవి
 • ప్రతి రోజు
 • తమిళనాడు
 • సైడ్ డిషెస్

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

 1. 200 கிராம் கடலை பருப்பு
 2. 2 பெரிய வெங்காயம்
 3. ஒரு மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
 4. 2 தக்காளி
 5. 5 பச்சை மிளகாய்
 6. 1/2 கப் புதினா இலை
 7. 1/2 கப் கொத்தமல்லி
 8. பிரிஞ்சி இலை ஒன்று
 9. 10 முந்திரி
 10. இரண்டு பட்டை
 11. லவங்கம் 3
 12. மிளகாய்தூள் 3 டேபிள்ஸ்பூன்
 13. மஞ்சள் தூள் அரை டீஸ்பூன்
 14. சோம்பு தூள் ஒரு டீஸ்பூன்
 15. எண்ணெய் தேவைக்கேற்ப

வழிமுறைகள்

 1. முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்
 2. கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து உப்பு போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்
 3. அரைத்த கடலைப்பருப்பை தோசை தவாவில் போட்டு தட்டி எண்ணெய் ஊற்றி ஒரு புறம் சிவந்ததும் மறுபுறம் திருப்பிப் போட்டு எடுத்து ஆறவைக்கவும்
 4. இருபுறமும் இதேபோல் லேசாக சிவந்ததும் அதை எடுத்து ஆற வைத்து நன்கு உலர்த்தி எடுத்து வைத்துக் கொள்ளவும்
 5. ஆறிய பின் இந்த படத்தில் உள்ளது போல் நன்கு உதிர்த்து எடுத்துக் கொள்ளவும்
 6. ஒரு பிரஷர் குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை லவங்கம் பிரிஞ்சி இலை முந்திரி போட்டு தாளிக்கவும்
 7. பின்னர் அதில் பச்சை மிளகாய் மற்றும் பொடியாக அரிந்த வெங்காயம் போட்டு வதக்கவும்
 8. வெங்காயம் பச்சை மிளகாய் நன்கு வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்
 9. அதன் பின் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்
 10. பின்னர் புதினா மற்றும் கொத்தமல்லி சேர்த்து 2 கிளறு கிளறவும்
 11. பின்னர் மஞ்சள் தூள் மிளகாய் தூள் சோம்பு தூள் மற்றும் உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்
 12. அதன் பின் தண்ணீர் சேர்த்து அதில் உதிர்த்து வைத்துள்ள கடலைப் பருப்பை சேர்த்து குக்கரில் 2 விசில் விட்டு இறக்கவும்
 13. சுவையான சென்னை ஸ்பெஷல் வடை கறி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்