வீடு / சமையல் குறிப்பு / காரக்குடி சைவ(இலை ) மீன் குழம்பு

Photo of Veg - fish curry by Karuna Pooja at BetterButter
519
1
0.0(0)
0

காரக்குடி சைவ(இலை ) மீன் குழம்பு

Sep-26-2018
Karuna Pooja
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

காரக்குடி சைவ(இலை ) மீன் குழம்பு செய்முறை பற்றி

பருப்பு வகைகள் வைத்து மீன்குழம்பின் சுவையில் தயார் செய்வது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ஸ்டீமிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாசி பருப்பு 100 கிராம்
  2. தட்டைப்பயிறு 100 கிராம்
  3. பூண்டு 7 பல்
  4. மிளகாய் பொடி 2 ஸ்பூன்
  5. புளிக்கரைசல் 1 கிண்ணம்
  6. உப்பு தேவையான அளவு
  7. சின்ன வெங்காயம் 50 கிராம்
  8. தக்காளி ஒன்று
  9. நல்லெண்ணெய் 4 ஸ்பூன்
  10. கடுகு 1/4 டீஸ்பூன்
  11. சோம்பு 1 டீஸ்பூன்
  12. வெந்தயம் கால் டீஸ்பூன்
  13. வரமிளகாய்-2
  14. கருவேப்பிலை ஒரு கொத்து
  15. மல்லி இலை அலங்கரிக்க

வழிமுறைகள்

  1. பாசிப்பருப்பு மற்றும் தட்டைப்பயிறு 2 மணி நேரம் முன்னதாக ஊறவைக்கவும்
  2. ஊற வைத்த பருப்பை சுத்தம் செய்து தண்ணீர் வடித்து வைக்கவும்
  3. இரண்டு பருப்புகளுடன் வரமிளகாய் உப்பு சோம்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
  4. அரைத்த கலவையை வாழையிலையில் வைத்து சிறிது சிறிதாக சுருட்டி
  5. இதை ஆவியில் வேக விடவும்
  6. வெந்த பருப்பு வகைகளை இலை நீக்கி தனியே எடுத்து வைக்கவும்
  7. ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு வெந்தயம் கறிவேப்பிலை தாளித்து விடவும்
  8. இதனுடன் சின்ன வெங்காயம் நறுக்கியது சேர்த்து நன்கு வதக்கவும்
  9. பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்
  10. மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்
  11. தக்காளி சேர்த்து வதக்கவும்
  12. புளிக்கரைசல் சேர்த்து உப்புடன் ஒரு கொதி விடவும்
  13. கொதி வந்த பின்பு வேக வைத்த பருப்பு துண்டுகளை, உடன் சேர்த்து இரண்டு கொதி விட்டு இறக்கவும்.....
  14. இப்பொழுது சுவையான சைவ மீன் குழம்பு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்