Photo of yellow adai by shadiqah hasana at BetterButter
343
1
0.0(0)
0

மஞ்சடை

Sep-26-2018
shadiqah hasana
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

மஞ்சடை செய்முறை பற்றி

எங்களூர் கீழக்கரையில் இந்த மஞ்சடை மிக பிரபலம்.விஷேஷ காலங்களில் கண்டிப்பாக இந்த அடை இடம் பெற்று விடும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஈத்
  • தமிழ்நாடு
  • சிம்மெரிங்
  • அப்பிடைசர்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. ரவை போல் அரைத்து வறுத்த அரிசி மாவு 500 கிராம்
  2. தேங்காய்ப்பால் 4 கப் சுமார் ஒரு தேங்காயில் அரைத்து பிழிந்தது
  3. முட்டை 1
  4. மஞ்சள் பொடி 1 டீஸ்பூன்
  5. பொடியாக நறுக்கிய வெங்காயம் 1/2 கப்
  6. பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 2
  7. வறுத்து அரைத்த சோம்பு பொடி 1 டேபிள்ஸ்பூன்
  8. கருவேப்பிலை சிறிது
  9. மல்லி இலை சிறிது
  10. உப்பு சுவைக்கேற்ப
  11. எண்ணைய்1/2 கப்
  12. நெய் 4 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. முட்டையை நன்கு அடிக்கவும்.இதில் நறுக்கிய மல்லி கருவேப்பிலை பச்சை மிளகாய் தேங்காய்ப்பால் உப்பு மஞ்சள்தூள் சோம்புத்தூள அனைத்தையும் சேர்த்து கலந்து கொள்ளவும்
  2. மாவை சிறிது சிறிதாக சேர்த்து கட்டி இல்லாமல் தோசை பத த்திற்கு கரைத்துக்கொள்ளவும்
  3. இது சுமார் அரை மணி நேரம் ஊற வேண்டும்
  4. எண்ணையும் நெய்யையும் கலந்து வைக்கவும்
  5. அடிக்கனமான தவாவை அடுப்பில் வைத்து எண்ணெய் நெய் கலவை விடவும்
  6. சூடேறியதும் ஒரு குழிக்கரண்டி அளவில் மாவை எடுத்து நடுவில் ஊற்றவும்
  7. பொன்னிறத்தில் முறுகலாக வெந்ததும் திருப்பிப்போடவும்
  8. சூடான மட்டன் குழம்பு வெஜ் குர்மாவுடன் சேர்த்து சாப்பிடலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்