வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் அரைத்த குழம்பு

Photo of Cocounut kulambu by Deepa Srivatsan at BetterButter
175
0
0.0(0)
0

தேங்காய் அரைத்த குழம்பு

Sep-26-2018
Deepa Srivatsan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் அரைத்த குழம்பு செய்முறை பற்றி

தேங்காய் அரைத்து திருநெல்வேலி பக்கம் செய்யக்கூடிய குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தேங்காய் துருவல் ஒரு கப்
  2. புளி ஒரு சிறு நெல்லிக்காயளவு
  3. உளுத்தம்பருப்பு 2 ஸ்பூன்
  4. வெந்தயம் கால் டீஸ்பூன்
  5. மிளகாய்வற்றல் 4
  6. வெண்டக்காய் அல்லது கத்திரிக்காய் நறுக்கியது கால் கப்
  7. தேங்காய் எண்ணெய் ஒரு டீஸ்பூன்
  8. கடுகு அரை டீஸ்பூன்
  9. கறிவேப்பிலை சிறிதளவு

வழிமுறைகள்

  1. புளியை நன்றாக கரைத்து கொட்டை இல்லாமல் வடிகட்டி வைத்துக் கொள்ளவும்
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பு வெந்தயம் மிளகாய் வற்றல் ஆகியவற்றை வறுக்கவும்
  3. பின் தேங்காயுடன் சேர்த்து நைசாக மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவும்
  4. வாணலியில் தண்ணீர் ஊற்றி நறுக்கிய காய்கறிகளை சிறிது மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்
  5. காய் வெந்ததும் புளிக் கரைசலை ஊற்றி உப்பு போடவும்
  6. அதன் பின் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்
  7. பின் எண்ணை ஊற்றி கடுகு கறிவேப்பிலை தாளித்து இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்