வீடு / சமையல் குறிப்பு / தேங்காய்பட்டணம் இறால் மஞ்சள் பால்

Photo of Thengaipattanam prawn coconutmilk curry by Benazer Abdul Kader at BetterButter
328
3
0.0(0)
0

தேங்காய்பட்டணம் இறால் மஞ்சள் பால்

Sep-27-2018
Benazer Abdul Kader
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

தேங்காய்பட்டணம் இறால் மஞ்சள் பால் செய்முறை பற்றி

கன்னியாகுமரி மாவட்டத்தின் கடலோர கிராமங்களான தேங்காய்பட்டணம், இனையம், புத்தன்துறை ஆகிய இடங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற குழம்பு இது

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • பாய்ளிங்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. தேங்காய் ஒன்றரை கப்
  2. இறால் 500 கி
  3. சாம்பார் வெங்காயம் 15
  4. சோம்பு ஒரு தேக்கரண்டி
  5. மல்லி விதை ஒரு தேக்கரண்டி
  6. வர மிளகாய் 7
  7. மஞ்சள்தூள் 1/4 தேக்கரண்டி
  8. பட்டை ஒரு இன்ச் துண்டு
  9. கிராம்பு ஐந்து
  10. கருவேப்பிலை 2 கொத்து
  11. தேங்காய் எண்ணெய் 2 தே க
  12. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வாணலியில் தேங்காய், 7 சாம்பார் வெங்காயம் , சோம்பு, தனியா, வரமிளகாய், பட்டை, கிராம்பு ஆகியவற்றை வாசனை வரும் வரை வதக்கவும்
  2. வாசனை வந்தவுடன் அடுப்பை அணைத்து மஞ்சத்தூள் விட்டு கலந்து வைக்கவும்
  3. இந்தக் கலவையை மிக்ஸியில் நன்கு வடிய அரைக்கவும்
  4. பின்னர் ஒரு சட்டியில் தேங்காய் எண்ணெய், விட்டு அதில் கிராம்பு, பட்டை, கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்
  5. பின்னர் அரைத்த தேங்காய் விழுதை அதனுடன் சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்
  6. தேவைக்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்
  7. உப்பு சரி பார்த்து கொள்ளவும்
  8. கொதித்ததும் நன்கு சுத்தம் செய்த இறாலை இதனுடன் சேர்த்து 10 நிமிடங்கள் வேக விடவும்.
  9. இறால் வெந்ததும் அடுப்பை அணைத்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்