வீடு / சமையல் குறிப்பு / ஃபிர்னி (காயல்பட்டினம் ஸ்பெஷல்)

Photo of Firni (kpm spl) by Zainab Fazeela at BetterButter
431
5
0.0(0)
0

ஃபிர்னி (காயல்பட்டினம் ஸ்பெஷல்)

Sep-28-2018
Zainab Fazeela
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

ஃபிர்னி (காயல்பட்டினம் ஸ்பெஷல்) செய்முறை பற்றி

இது ஒருவகை இனிப்பு பண்டம்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • சௌத்இந்தியன்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. பால் 1 லிட்டர்
  2. ரவை 1 கப்
  3. சீனி தேவைக்கு
  4. நெய் 1 டேபிள் ஸ்பூன்
  5. பாதம் முந்திரி பிஸ்தா 1கப்
  6. கிஸ்மிஸ் தேவைக்கு

வழிமுறைகள்

  1. கடாயை மிதமான தீயில் வைத்து நெய் ஊற்றி அதில் ரவையை சேர்த்து வருக்கவும்
  2. பாதம் மற்றும் பிஸ்தாவை தண்ணீரில் ஊறவைத்து பிறகு தோலை உரித்து முந்திரிபருப்பு சேர்த்து மிக்ஸியில் கொஞ்சம் கொர கொர வென்று அரைத்து கொள்ளவும்
  3. வாணலியில் பாலை ஊற்றி நன்கு காய்ச்சி அதனுடன் வருத்த ரவையை சேர்த்து கிளறி கொண்டே இருக்கவேண்டும்
  4. ரவை வேகும் போது தேவைக்கு சீனி சேர்த்து கிளறவும்
  5. சீனி நன்கு கரைந்ததும் அரைத்து வைத்துள்ள நட்ஸ் சேர்த்து கொஞ்ச நேரம் கிளறி விட்டு இறக்கவும்
  6. ஃபிர்னி கொஞ்சம் இளகல் பதத்துடன் இருக்கும்போதே இறக்கி விடவும்
  7. ஆறியதும் இன்னும் கொஞ்சம் இறுகும் இறுதியில் கிண்ணிகளில் ஊற்றி நட்ஸ் மற்றும் கிஸ்மிஸ் தூவி குளிர வைத்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்