வீடு / சமையல் குறிப்பு / மண்பானை ரசம் (கொதிக்க வைத்த புளி ரசம்)திண்டுக்கல் N.K.Tஸ்பெஷல்

Photo of Sand Pot Rasam (Dindigul nagaiyakottai )Special by Bena Aafra at BetterButter
577
2
5.0(0)
0

மண்பானை ரசம் (கொதிக்க வைத்த புளி ரசம்)திண்டுக்கல் N.K.Tஸ்பெஷல்

Sep-28-2018
Bena Aafra
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மண்பானை ரசம் (கொதிக்க வைத்த புளி ரசம்)திண்டுக்கல் N.K.Tஸ்பெஷல் செய்முறை பற்றி

மணமனக்கும் மண்பானை ரசம் ......ரசப்பொடி அரைத்து செய்த ரசம். ..

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. புளி-சிறிது
  2. ரசம் பொடி -2ஸ்பூன்
  3. பெருங்காயத்தூள்-1/2டீஸ்பூன்ப
  4. கடுகு -1ஸ்பூன்
  5. உளுத்தம் பருப்பு -1ஸ்பூன்
  6. கறிவேப்பிலை
  7. சீரகம் -1ஸ்பூன்
  8. வரமிளகாய்-2
  9. பச்சை மிளகாய் -1
  10. உப்பு -தேவைக்கேற்ப
  11. எண்ணெய்
  12. பூண்டு -1
  13. கொத்தமல்லித்தழை
  14. தக்காளி -1
  15. ரசப்பொடி செய்வதற்கு ::
  16. தனியா-300கிராம்
  17. மிளகு -100கிராம்
  18. துவரம்பருப்பு -100கிராம்
  19. கடலைப்பருப்பு-50கிராம்
  20. சீரகம் -25கிராம்
  21. மஞ்சள் துண்டு -சிறிது
  22. காய்ந்த மிளகாய் -20லிருந்து 30

வழிமுறைகள்

  1. முதலில் புளித்தண்ணீரை வடிகட்டி அடுப்பில் வைத்து மண்பானையில் கொதிக்க விடவும்.
  2. அதனுடன் ஒரு பச்சை மிளகாய்-ஐ நசுக்கி சேர்த்து கொள்ளவும்.
  3. நன்றாக பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.
  4. பின் உப்பு, ரசப்பொடி, பெருங்காயத்தூள், சேர்த்து கொதித்து ஒரு பொங்கு பொங்கியவுடன் கீழே இறக்கவும்.
  5. இறக்கியதும் கொத்தமல்லித்தழை,கறிவேப்பிலை சிறிது சேர்க்கவும்.
  6. பிறகு ,அடுப்பில் மண்பானை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றவும்.
  7. காய்ந்ததும் கடுகு ,உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை ,வரமிளகாய், சீரகம், சேர்த்து தாலிக்கவும்.
  8. பிறகு நன்றாக தட்டிய பூண்டு பற்களை சேர்த்து கிண்டவும்.
  9. நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
  10. பின் கொதித்து இறக்கிய ரசக்கலவையை ஊற்றவும்.
  11. நுரை கட்டியவுடன் இறக்கவும்.
  12. சூடான சுவையான மண்பானை ரசம் தயார்.
  13. சூடான சாதத்துடன் பரிமாறவும்.
  14. ரசப்பொடி செய்வதற்கு ::
  15. ரசப்பொடி செய்ய கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிஷினில் அல்லது மிக்ஸியில் அரைத்து வைத்து கொள்ளவும். தேவைப்படும் பொழுது பயன்படுத்திக் கொள்ளவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்