Photo of vattalappam by shadiqah hasana at BetterButter
786
4
0.0(0)
0

வட்டலப்பம்

Sep-28-2018
shadiqah hasana
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

வட்டலப்பம் செய்முறை பற்றி

இஸ்லாமிய இல்லங்களில் விஷேஷங்களுக்கு வட்டலப்பம் இல்லாவிட்டால் நிறைவடையாது.ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு முறையில் செய்யப்படும்.தென் மாவட்டங்களின் செய்முறையை பகிர்கிறேன்.இது சர்க்கரை பனங்கருப்பட்டி இரண்டிலும் செய்யலாம்.இரண்டுக்கும் சுவை வித்தியாசப்படும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • ஈத்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. முற்றிய பெரிய தேங்காய் 1
  2. முட்டை 6
  3. பனங்கருப்பட்டி 300-400 கிராம்
  4. நெய் 3 டீஸ்பூன்
  5. பாதாம் முந்திரி தலா பத்து
  6. உலர்ந்த திராட்சை 1 டேபிள்ஸ்பூன்
  7. குங்கும்ப்பூ 1 /2 சிட்டிகை
  8. ஏலப்பொடி 1/4 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. தேங்காயை மிக்சியில் அரைத்து கெட்டியாக ஒரு பெரிய டம்ளர் பால் எடுக்கவும்
  2. கருப்பட்டியை துருவிக்கொள்ளவும்
  3. முட்டையை பீட்டரால் நன்கு நுரைக்கும் வரை அடிக்கவேண்டும்
  4. அத்தனையும் மிக்சி பெரிய ஜாரில் விட்டு நன்கு அடித்துக்கலக்கவேண்டும்
  5. இதனை ஸ்டைய்னரால் வடிகட்டி வாயகன்ற பாத்திரத்தில் விடவும்
  6. குங்கும்ப்பூ ஏலப்பொடி சேர்த்துக்கலக்கவும்
  7. இதனை ஸ்டீமர் அல்லது இட்லி தட்டில் வைத்து அவிக்கலாம் .பிரசர் குக்கரில் வைத்து அவித்தால் நிறம் மாறி விடும்.
  8. பத்து நிமிடம் வெந்ததும் முந்திரி பாதாம் திராட்சையை தூவ வேண்டும்.முதலிலேயே தூவினால் அடியில் போய் விடும்
  9. மேலும் 20-30 நிமிடம் வேக வைத்து நடுவில் கத்தி செருகிப்பார்த்தால் ஒட்டாமல் வரும்பொழுது அடுப்பை அணைத்து விடவும்
  10. லேசாக ஆற விட்டு துண்டுகள் போடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்