வீடு / சமையல் குறிப்பு / நெல்லை ஸ்பெஷல் வெண்டைக்காய் பச்சடி

Photo of Nellai Special Vendaikkai Pachadi by Sowmya Sundar at BetterButter
451
4
0.0(0)
0

நெல்லை ஸ்பெஷல் வெண்டைக்காய் பச்சடி

Sep-29-2018
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

நெல்லை ஸ்பெஷல் வெண்டைக்காய் பச்சடி செய்முறை பற்றி

திருநெல்வேலி மாவட்டத்தில் பிரபலமாக செய்யக்கூடிய வெண்டைக்காய் பச்சடி. ரசம் சாதத்திற்கும் ,உளுந்து சாதத்திற்க்கும் நல்ல பொருத்தமாக இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • பாய்ளிங்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வெண்டைக்காய் அரை கிலோ
  2. வெங்காயம் ஒன்று
  3. தக்காளி-2
  4. புளி நெல்லிக்காய் அளவு
  5. உப்பு தேவையான அளவு
  6. மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்
  7. எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன் + 1 டீஸ்பூன்
  8. கடுகு உளுத்தம்பருப்பு தலா அரை டீஸ்பூன்
  9. கறிவேப்பிலை சிறிது
  10. அரைக்க
  11. தேங்காய் துருவல் கால் கப்
  12. சீரகம் 1 டீஸ்பூன்
  13. பச்சை மிளகாய் 3

வழிமுறைகள்

  1. வெண்டைக்காய் தக்காளி வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்
  3. பின்னர் அதில் வெண்டைக்காய் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்
  4. அரைக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து மிக்சியில் தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து கொள்ளவும்
  5. காய் வதங்கியதும் புளிகரைசல் சேர்த்து கொதிக்க விடவும்.பின் அதில் அரைத்த விழுது சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்
  6. எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு ,கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்