வீடு / சமையல் குறிப்பு / காயல் அஹனிக் கறி

Photo of Kayal Ahani Kari by Najeeba Refaye at BetterButter
667
3
0.0(0)
0

காயல் அஹனிக் கறி

Sep-29-2018
Najeeba Refaye
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

காயல் அஹனிக் கறி செய்முறை பற்றி

அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய காயல் அஹனிக் கறி - காயல்பட்டிணம் ஸ்பெஷல்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • பிரெஷர் குக்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மட்டன் 1/2 கிலோ
  2. தயிர் 100 கிராம்
  3. சுத்தமான நெய் 75 கிராம்
  4. தேங்காய் எண்ணெய் 75 கிராம்
  5. முந்திரி 50 கிராம்
  6. பாதம் 50 கிராம்
  7. பச்சை மிளகாய் 7
  8. வெங்காயம் 3
  9. இஞ்சிப் பூண்டு விழுது 3 டீஸ்பூன்
  10. ஏலக்காய், கருவா, கிராம்பு ,தேவையான அளவு
  11. ரம்பை இலை 2
  12. கொத்த மல்லி இலை 1/4 கப்
  13. புதினா இலை 1/4 கப்

வழிமுறைகள்

  1. கறியை கழுவி விட்டு அதில் பாதி தயிர் வெங்காயம் போட்டு புரட்டி வைக்கவும். பாதம் தோலை நீக்கி விட்டு, முந்திரிப் பருப்பு, பச்சை மிளகாய் 3 இவற்றை அரைத்து வைக்கவும்.
  2. பின்னர் அடுப்பில் சட்டியை வைத்து நெய், எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், ஏலம், கருவா, கிராம்பு, ரம்பை இலை, தயிர் ஊற்றவும்.
  3. அவை பொன்னிறமாக வந்தவுடன் கறியைப் போட்டு, பச்சை மிளகாய், புதினா இலை, கொத்தமல்லி இலை, உப்புப் போட்டு குக்கரில் 3 விசில் வரும் வரை விட்டு இறக்கவும்.
  4. பிறகு, அரைத்து வைத்துள்ள கலவையை அதில் ஊற்றிக் கலக்கி, கொதித்த பிறகு தீயை குறைத்து 10 நிமிடம் அப்படியே போட்டு விட்டு தீயை அணைத்து விட்டு எடுத்தால் *சுவையான அஹனிக் கறி ரெடி*

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்