வீடு / சமையல் குறிப்பு / எலுமிச்சை சேவை

Photo of Lemon Sevai by Vanita Vasudevan at BetterButter
1798
42
0.0(0)
0

எலுமிச்சை சேவை

Aug-25-2015
Vanita Vasudevan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
120 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. இட்லி அரிசி - 2 கப்
  2. நல்லெண்ணெய் -3 தேக்கரண்டி
  3. 2 எலுமிச்சைப் பழத்திலிருந்து சாறு
  4. கடுகு - 1 தேக்கரண்டி
  5. பச்சை மிளகாய் - 2 (நன்றாக நறுக்கப்பட்டது)
  6. கருவேப்பிலை ஒரு கொத்து
  7. ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள்
  8. சுவைக்கேற்ற உப்பு
  9. ஒரு சிட்டிகை மஞ்சள் தூள்

வழிமுறைகள்

  1. அரிசியைக் கழுவித் தண்ணீரில் ஊறவைக்கவும், அரிசி முழுமையாகத் தண்ணீரில் மூழ்கியிருப்பதை உறுதி செய்துகொள்க. 2 மணி நேரங்களுக்கு ஊறட்டும்.
  2. ஊறிய அரிசியை ஒரு மிக்சருக்கு மாற்றி மிருதுவான பசையாக அரைத்துக்கொள்ளவும். பாதி அடர்வாக ஊற்றும் பதத்திற்கு இருக்கவேண்டும், தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.
  3. ஒரு பெரிய வானலியை சூடுபடுத்தி நல்லெண்ணெயை சேர்க்கவும். தீயை குறைவாக வைத்துக்கொண்டு மாவு, உப்பைச் சேர்த்து தொடர்ந்து கலக்கவும்.
  4. சிறிது நேரத்திற்குப் பின் மாவு வானலியின் பக்கங்களிலிருந்து வெளிவரும், அடர்த்தியான பளபளப்பான மாவாக மாறும்.
  5. அடுப்பிலிருந்து இறக்கி ஆறவைக்கவும். கையளவு உருண்டைகளாகச் செய்து பக்கத்தில் வைத்துக்கொள்ளவும்.
  6. உங்கள் பிரஷர் குக்கரைப் பயன்படுத்தி இட்லிபோல் வேகவைக்கவும். 25 நிமிடத்திற்கு குறைவானத் தீயில் வேகவைக்கவும்.
  7. உருண்டைகள் சூடாக இருக்கும் போது, நூடுஸ்ல் செய்ய அழுத்தவும்.
  8. ஒரு சமயத்தில் ஒரு உருண்டையை அழுத்தி செய்யவும், நூடுல்ஸ் பெறுவதற்கு 'சேவை நாழி' சக்கரத்தைச் சுற்றவும்.
  9. அனைத்து உருண்டைகளையும் நீங்கள் அப்படிச் செய்துவிட்டால், அரிசி நூடுல்ஸ்களை ஒரு பெரிய பாத்திரத்திற்கு மாற்றவும்.
  10. வானலியைச் சூடுபடுத்தி, எண்ணெய், கடுகு சேர்த்து பொறிக்கவிடவும்.
  11. மஞ்சள் தூள், பெருங்காயத்தூளை தூவிவிட்டு பச்சைமிளகாயையும் கரிவேப்பிலையையும் போடவும். இறுதியாக அரிசி நூடுல்சை சேர்த்து மெதுவாகக் கையால் சுண்டவும்.
  12. எலுமிச்சைச் சாற்றை சேர்த்து நன்றாகக் கலக்கவும். உப்பு மற்றும் மசாலாவை சுவைக்கேற்ற அளவில் சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்