வீடு / சமையல் குறிப்பு / நாகூர், காரைக்கால் ஸ்பெஷல் வாடா

Photo of nagore special vada by Apsara Fareej at BetterButter
542
0
0.0(0)
0

நாகூர், காரைக்கால் ஸ்பெஷல் வாடா

Sep-29-2018
Apsara Fareej
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

நாகூர், காரைக்கால் ஸ்பெஷல் வாடா செய்முறை பற்றி

நாகூர் என்றாலே பலருக்கும் நினைவுக்கு வரும் திண்பண்டங்களில் ஒன்றுதான் இந்த வாடா. இதில் இறால் போட்டு செய்வதுதான் பிரபலம். சைவ பிரியர்கள் இறால் போடாமலே இதை செய்யலாம். மிகவும் சுவையாக இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • அப்பிடைசர்கள்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தண்ணீர் ஊற்றி ஊறிய சாதம் - 2 கப்
  2. ரவை - 1 கப்
  3. பச்சரிசி - 1 1/2 கப்
  4. சோடா உப்பு - 1 தேக்கரண்டி
  5. சின்ன வெங்காயம் - 10
  6. பெரிய வெங்காயம் - 2
  7. பச்சை மிளகாய் - 3
  8. தேங்காய் துருவல் - 1 1/2 மேஜைக்கரண்டி
  9. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  10. எண்ணெய் - பொறிப்பதற்கு + 1 மேஜைக்கரண்டி
  11. உப்பு - தேவைக்கேற்ப
  12. சின்ன இறால் - (விரும்பினால்) சிறிதளவு

வழிமுறைகள்

  1. தண்ணீர் ஊற்றிய சாதம் தான் இதற்கு நன்றாக இருக்கும். எனவே செய்ய வேண்டுமானால் சாதத்தை கொஞ்ச நேரம் தண்ணீர் ஊற்றி வைத்து விட்டு 6 மணி நேரம் கழித்து செய்யலாம்.
  2. சாதத்தில் உள்ள தண்ணீரை நன்கு வடித்து விட்டு அதில் ரவை மற்றும் சோடா உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். நன்கு கெட்டியாக இருக்க வேண்டும். மிகவும் குழைந்த சாதமாக இருந்தால், நான் கொடுத்த அளவை விட கூட ரவை எடுக்கலாம். கெட்டியாக இருக்க வேண்டும் அதான் முக்கியம். அதை 7 மணி நேரம் புளிக்க விடவும்.
  3. அதன் பிறகு சின்ன மற்றும் பெரிய வெங்காயத்தை படத்தில் உள்ளது போன்று அரிந்து வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயையும் பொடியாக அரிந்து கொள்ளவும். பச்சரிசியை ரவை பதத்திற்கு பொடித்து வைத்துக் கொள்ளவும்.
  4. இந்த பிசைந்து வைத்திருக்கும் வாடா மாவை இரண்டாக பிரித்து, அதில் ஒன்றில் இந்த அரிந்து வைத்திருக்கும் பாதியையும் அதற்கு தேவையான உப்பையும், பாதி பொடித்த அரிசியையும் சேர்த்து நன்கு பிசைந்து வைத்து கொள்ளவும்.
  5. மற்றொரு பாகத்திற்கு , மீதி அரிந்து வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் பச்சைமிளகாயை எண்ணெயில் போட்டு , அத்துடன் சிறிது மஞ்சள்த்தூளும், விருபினால் இறால் சிறிதை இரண்டிரண்டாக கட் செய்து அதில் போட்டு வதக்க வேண்டும். அதிலேயே தேங்காய்துருவலையும் சேர்த்து வாசம் வர வதக்கி விட்டு இறக்கி ஆற விடவும்.
  6. வதங்கியது ஓரளவு சூடு ஆறியதும், மீதி வாடா மாவில் சேர்த்து, அதற்கு தேவையான அளவு உப்பும், பொடித்த அரிசியையும் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். இரண்டு மாவு கலவையும் கெட்டியமாக இருக்க வேண்டும். அப்படி தளர்வாக இருப்பின் அதில் இன்னும் கொஞ்சம் அரிசியை பொடித்து போடலாம்.
  7. ஒரு வானலியில் பொறிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடு படுத்தவும். ஒரு தட்டில் ப்ளாஸ்டிக் பேப்பர் கழுவி வைத்து அதில் சிறிது தண்ணீர் தெளித்து விட்டு, கொஞ்சம் ப்ளைன் மாவிலிருந்து வைத்து லேசாக தட்டி நடுவில் ஓட்டை போட்டுக் கொண்டு அதை மெதுவாக எடுத்து எண்ணெயில் போடவும்.
  8. இதே மஞ்சள் வாடா மாவையும் எடுத்து வடை போன்று எண்ணெயில் போடவும். இறாலை வெறும் வாடா மாவில் ஆங்காங்கே இறாலை பதித்தும் எண்ணெயில் போட்டு பொறிக்கலாம். சைவ பிரியர்கள் வெறும் வெள்ளை கலவை போன்று செய்தே வாடாவாக சுட்டு எடுக்கலாம்.
  9. எண்ணெயில் போட்டதும், தன்னால் மேலே எழுந்து வரும் வரை திருப்பாமல் விடவும். எழும்பி லேசாக சிவந்ததும், திருப்பி போட்டு சிவக்க விடவும். இரு பக்கமும் நன்கு சிவந்ததும். எடுத்து விடவும்.
  10. இதேப் போன்று எல்லாவற்றையும் பொறுமையாக சுட்டு எடுத்தால் சூப்பரான, மொறு மொறுவென்ற வாடா தயார். மூன்று விதமான வாட செய்முறை இதில் இருக்கின்றது. இதில் நீங்கள் விரும்பியப்படி செய்து சாப்பிடலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்