வீடு / சமையல் குறிப்பு / ஆம்பூர் மட்டன் பிரியாணி

Photo of Ambur Mutton Biriyani by Jayasakthi Ekambaram at BetterButter
0
2
0(0)
0

ஆம்பூர் மட்டன் பிரியாணி

Sep-30-2018
Jayasakthi Ekambaram
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஆம்பூர் மட்டன் பிரியாணி செய்முறை பற்றி

சீரகசம்பா அரிசி வைத்து செய்த மட்டன் பிரியாணி

செய்முறை டாக்ஸ்

 • నాన్ వెజ్
 • మీడియం/మధ్యస్థ
 • రాత్రి విందు
 • తమిళనాడు
 • ప్రెజర్ కుక్
 • ఉడికించాలి
 • మితముగా వేయించుట
 • ప్రధాన వంటకం
 • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

 1. சீரக சம்பா அரிசி அரை கிலோ
 2. மட்டன் அரை கிலோ
 3. வெங்காயம்-3
 4. தக்காளி-3
 5. பட்டை ஒரு சிறிய துண்டு
 6. கிராம்பு-2
 7. ஏலக்காய் ஒன்று
 8. அன்னாசி பூ 1
 9. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
 10. தனியா தூள் ஒன்றரை ஸ்பூன்
 11. கரம் மசாலா தூள் ஒன்றரை ஸ்பூன்
 12. எண்ணெய் 8 ஸ்பூன்
 13. நெய் 2 ஸ்பூன்
 14. புதினா இலைகள் ஒரு கைப்பிடி அளவு
 15. கொத்தமல்லி இலைகள் ஒரு கைப்பிடி அளவு
 16. உப்புத்தூள் இரண்டு ஸ்பூன்
 17. கெட்டியான தயிர் 2 ஸ்பூன்
 18. எலுமிச்சம் பழம் பாதி
 19. இஞ்சி பூண்டு பேஸ்ட் 2 ஸ்பூன்

வழிமுறைகள்

 1. ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து சீரக சம்பா அரிசியை 70% வேக வைத்து தண்ணீரை வடிகட்டி கொள்ளவும்
 2. வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
 3. கொத்தமல்லி கருவேப்பிலை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
 4. மிளகாய்த்தூள் தனியாத்தூள் கரம் மசாலாத்தூள் பட்டை லவங்கம் எலுமிச்சம்பழம் தயிர் ஆகியவற்றை ரெடியாக எடுத்து வைக்கவும்
 5. அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய், நெய் ஊற்றவும்
 6. எண்ணெய் காய்ந்ததும் பட்டை லவங்கம் பிரிஞ்சி இலை தாளிக்கவும்
 7. சிறிது வெங்காயத்தை போட்டு நன்றாக சிவக்க வறுக்கவும்
 8. மீதி வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வறுக்கவும்
 9. தக்காளி இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும்
 10. மசாலா பொடிகள் உப்பு சேர்க்கவும்
 11. மட்டனையும் சேர்த்து நன்றாக வதக்கவும்
 12. அரை டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விட்டு குக்கரை மூடவும்
 13. பத்து நிமிடம் மிதமான தீயில் மட்டனை வேக வைத்து குக்கரை ஆப் செய்யவும்
 14. ஆவி அடங்கியதும் குக்கரைத் திறந்து தயிர் எலுமிச்சம்பழ சாறு சேர்க்கவும்
 15. இந்த மட்டன் கிரேவியில் சாதத்தை சேர்த்துக் கொள்ளவும்
 16. எல்லாவற்றையும் நன்றாக கலக்கி பிறகு வெந்த சாதத்தை அதில் கொட்டி தம் கட்ட வேண்டும்.
 17. 10 நிமிடம் தம் கட்டிய பிறகு அடுப்பை ஆப் செய்யவும்
 18. கொத்துமல்லி தழை தூவி சூடாக பரிமாறவும்
 19. வேக வைத்த முட்டை புளி கத்திரிக்காய் வெங்காய பச்சடி சைட் டிஷ் ஆக வைத்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்