வீடு / சமையல் குறிப்பு / ஃபிர்னி (ரவை பாயாசம்)

Photo of Phirni( sooji kheer) by Fathima Beevi at BetterButter
347
2
0.0(0)
0

ஃபிர்னி (ரவை பாயாசம்)

Sep-30-2018
Fathima Beevi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

ஃபிர்னி (ரவை பாயாசம்) செய்முறை பற்றி

ஃபிர்னி (ரவை பாயாசம்) திண்டுக்கல் கல்யாண வீட்டில் பரிமாறப்படும் ஃபிர்னீ

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. ரவை - 200 கிராம்
  2. பால் - 500 மிலி
  3. சர்க்கரை - 300 கிராம்
  4. நெய் - 2 டீஸ்பூன்
  5. ஏலக்காய் - 4
  6. முந்திரி பருப்பு - 15
  7. பாதாம் - 10
  8. பிஸ்தா - 10
  9. வால்நட்ஸ் - 10
  10. உலர் திராட்சை - 10
  11. மில்க்மெய்ட்  - 50 மிலி

வழிமுறைகள்

  1. கடாயில்  நெய்யை (1 டீஸ்பூன்) ஊற்றி சூடான பின் முந்திரி, பாதாம், பிஸ்தா, வால்நட்  மற்றும் உலர் திராட்சைகளை சேர்க்கவும். லேசாக வறுத்து எடுத்து பின் வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும்.
  2. அதே கடாயில் மீதமுள்ள நெய் ஊற்றி ரவை சேர்த்து நன்கு வறுக்கவும்.
  3. ரவையை நன்கு வறுத்தவுடன், பால் சேர்க்கவும்.
  4. ரவையை பாலில் நன்கு வேக விடவும்.  மிகவும் கெட்டியாக இருந்தால், கொஞ்சம் தண்ணீர் சேர்க்கவும்.
  5. இப்போது சர்க்கரை மற்றும் ஏலக்காய் சேர்க்கவும்.
  6. ரவை கட்டிகளாக ஆகாமல் தொடர்ந்து  ஃபிர்னீயை கிண்ட வேண்டும்.
  7. ரவை, சர்க்கரை எல்லாம் நன்றாக கலந்து கெட்டியான பின், வறுத்து வைத்துள்ள பாதாம், பிஸ்தா, முந்திரி பருப்பு, வால்நட் மற்றும் உலர் திராட்சையை சேர்த்து நன்கு கிளறவும்.
  8. மேலும் மில்க்மெய்ட் சேர்த்து 5 நிமிடம் நன்றாக கலக்கவும்.
  9. சூடாக அல்லது குளிர வைத்து ஃபிர்னீயை  பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்