வீடு / சமையல் குறிப்பு / முட்டை உப்பாணம் கீழக்கரை ஸ்பெஷல்

Photo of Egg drop curry by shadiqah hasana at BetterButter
0
2
0(0)
0

முட்டை உப்பாணம் கீழக்கரை ஸ்பெஷல்

Sep-30-2018
shadiqah hasana
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

முட்டை உப்பாணம் கீழக்கரை ஸ்பெஷல் செய்முறை பற்றி

எங்களூரில் இது ஸ்பெசல் சைட் டிஷ்.பாலூட்டும் தாய்மார்களுக்கு உகந்தது.ஆதி காலத்தில் குழந்தை பெற்றால் நெருங்கிய உறவினர்களுக்கு இதை சமைத்துக்கொடுப்பார்கள்.இப்பொழுது இது வழக்ககொழிந்து விட்டது.

செய்முறை டாக்ஸ்

  • నాన్ వెజ్
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • చిన్న మంట పై ఉడికించటం
  • సైడ్ డిషెస్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. வெங்காயம் 1
  2. தக்காளி 1/2
  3. பச்சை மிளகாய் 1
  4. தேங்காய் 1/2
  5. ரம்பைஇலை 1
  6. கருவேப்பிலை சிறிது
  7. பட்டை சிறு துண்டு
  8. மிளகாய்தூள் 1/2 டீஸ்பூன்
  9. மல்லித்தூள் 3 டீஸ்பூன்
  10. ஜீரகத்தூள் 2 டீஸ்பூன்
  11. மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்
  12. பூண்டு 10 பற்கள்
  13. நல்லெண்ணெய்-4 டேபிளஸ்பூன்
  14. உப்பு சுவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கவும்.பச்சை மிளகாயை இரண்டாக கீறவும்.பூண்டை உருத்து இரண்டிரண்டாக நறுக்கிக்கொள்ளவும்
  2. தேங்காயை மிக்சியில் அரைத்து பால் எடுக்கவும் .முதல் பாலை தனியாகவும் இரண்டாம் மூன்றாம் பாலை தனியாகவும் வைக்கவும்..பாலின் அளவு சுமார் 3 கப்கள் இருக்க வேண்டும்
  3. வாயகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் விடவும்
  4. கருவேப்பிலை பட்டை ரம்பைஇலை தாளிக்கவும்.
  5. மணம் வந்ததும் வெங்காயம் தக்காளி பூண்டு பச்சை மிளாகாய் சேர்த்து வதக்கவும்.
  6. நன்கு எண்ணெய் பிரிந்ததும் மசாலா வகைகள் உப்பு சேர்த்து சுருள வதக்கவும்.
  7. இரண்டாம் மூன்றாம் பாலை சேர்த்து கொதிக்க விடவும்
  8. நன்கு கொதிக்கும் பொழுது அடுப்பை சிம்மில் வைத்து முதல் பாலை ஊற்றிய உடன் முட்டைகளை உடைத்து மெதுவாக ஊற்றவும்
  9. சிம்மில் வைத்தே வேக வைக்கவேண்டும்
  10. முட்டை வெந்து மேலே எண்ணெய் பிரிந்ததும் அடுப்பை அணைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்