வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு வெங்காயத்தாள் பொறியல்

Photo of Potato spring onion curry by Fathima Beevi at BetterButter
467
2
0.0(0)
0

உருளைக்கிழங்கு வெங்காயத்தாள் பொறியல்

Sep-30-2018
Fathima Beevi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

உருளைக்கிழங்கு வெங்காயத்தாள் பொறியல் செய்முறை பற்றி

உருளைக்கிழங்கு வெங்காயத்தாள் பொறியல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. வேக வைத்த  உருளைக்கிழங்கு - 3 - பொடி துண்டுகளாக மசித்து கொள்ளவும்
  2. பெரிய வெங்காயம்-1 - பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  3. தக்காளி-1 - பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  4. வெங்காயத்தாள்- பொடியாக நறுக்கியது- 3 டேபிள் ஸ்பூன்
  5. காய்ந்த மிளகாய் வற்றல்-2
  6. கொத்தமல்லி இலை- 1 டேபிள் ஸ்பூன்
  7. மஞ்சள் தூள்-1/4 டீ ஸ்பூன்
  8. மிளகாய் தூள்- 1/4 டீ ஸ்பூன்
  9. கரம் மசாலா தூள்- 1 சிட்டிகை
  10. பெருங்காயத்தூள்-1 சிட்டிகை
  11. உப்பு- தேவையான அளவு
  12. எண்ணெய்- 2 டேபிள் ஸ்பூன்
  13. சீரகம்-1/4 டீ ஸ்பூன்
  14. ஓம விதைகள் 1/4 டீ ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடான பின் சீரகம் சேர்க்கவும்.
  2. பின்பு காய்ந்த மிளகாய் வற்றல், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  3. நன்கு வதங்கியதும் தக்காளி மற்றும் வெங்காயத்தாள் சேர்த்து வதக்கவும்.
  4. பின்பு வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு கிளறவும்.
  5. பின்பு மஞ்சள் தூள், மிளகாய் தூள், பெருங் காயத்தூள், கரம் மசாலா தூள், ஓம விதைகள் மற்றும் உப்பு சேர்த்து மிதமான சூட்டில் நன்கு கிளறவும்.
  6. ஒரு 10 நிமிடம் கடாயை மூடி வைத்து மிதமான சூட்டில் வேக விடவும்.
  7. 10 நிமிடத்திற்கு பிறகு நன்கு கிளறி கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்