BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / மதுரை கரண்டி ஆம்லெட்

Photo of Madurai Karandi Omelette by Vahitha Hasan at BetterButter
1
2
0(0)
0

மதுரை கரண்டி ஆம்லெட்

Oct-01-2018
Vahitha Hasan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மதுரை கரண்டி ஆம்லெட் செய்முறை பற்றி

மதுரை பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற தாளிப்பு கரண்டியில் செய்யப்படும் ஆம்லெட்

செய்முறை டாக்ஸ்

  • నాన్ వెజ్
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • తక్కువ నూనెలో వేయించటం
  • సైడ్ డిషెస్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. 2 கோழி முட்டை
  2. 5 சின்ன வெங்காயம் நறுக்கியது
  3. 1 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது
  4. 1 இடுக்கு கருவேப்பிலை பொடியாக நறுக்கியது
  5. 1 தேக்கரண்டி மிளகு தூள்
  6. 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  7. உப்பு தேவையான அளவு
  8. 2 மேஜை கரண்டி நல்லெண்ணெய்

வழிமுறைகள்

  1. ஒரு சிறு கோப்பையில் முட்டையை உடைத்து ஊற்றி அடித்துக் கொள்ளவும்
  2. பின்பு அதில் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் கருவேப்பிலை மிளகு தூள் மஞ்சள் தூள் மற்றும் உப்பு கலந்து நன்றாக அடித்துக் கொள்ளவும்
  3. தாளிப்பு கரண்டியில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்
  4. எண்ணெய் சூடானதும் அடித்த முட்டை கலவையை ஊற்றவும்
  5. அடுப்பை நன்றாக குறைத்து ஒரு மூடி போட்டு 5 நிமிடம் வைக்கவும்
  6. பின்பு அந்த வெந்த முட்டையை உடைந்து விடாமல் மெதுவாக திருப்பி போடவும்
  7. மீண்டும் 5 நிமிடம் குறைந்த தீயில் வேக விடவும்
  8. வெந்த முட்டையை வாழையிலையில் வைத்து சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்