Photo of Kovai Angannan Biryani by Vahitha Hasan at BetterButter
1690
4
0.0(1)
0

Kovai Angannan Biryani

Oct-01-2018
Vahitha Hasan
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. 1/2 கிலோ சுத்தம் செய்த கோழி
  2. 2 கப் பாஸ்மதி அரிசி
  3. கால் கப் நறுக்கிய மல்லி
  4. கால் கப் நறுக்கிய புதினா
  5. தண்ணீர் தேவையான அளவு
  6. உப்பு தேவையான அளவு
  7. 2 பெரிய வெங்காயம் நீளமாக நறுக்கியது
  8. ஒரு பிரிஞ்சி இலை ஒரு அன்னாசிப்பூ 2 பட்டை 3 கிராம்பு 2 ஏலக்காய்
  9. கால் கப் எண்ணெய் மற்றும் நெய் கலந்தது
  10. அரைக்க
  11. ஒரு கப் சின்ன வெங்காயம்
  12. 3 மேசைக்கரண்டி தயிர்
  13. ஒரு இன்ச் இஞ்ஜி துண்டு
  14. 4 பூண்டு பல்
  15. 4 பச்சை மிளகாய்
  16. இரண்டு தேக்கரண்டி சீரகம்
  17. இரண்டு தேக்கரண்டி மிளகு
  18. சிறு துண்டு பட்டை
  19. இரண்டு ஏலக்காய்
  20. மூன்று கிராம்பு
  21. ஒன்று அன்னாசிப்பூ

வழிமுறைகள்

  1. அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு லேசாக தண்ணீர் ஊற்றி நன்கு மையாக அரைத்துக் கொள்ளவும்
  2. அரைத்த மசாலா பொருட்களை சுத்தம் செய்த கோழியில் போட்டு நன்கு பிரட்டி அரை மணி நேரம் ஊற வைக்கவும்
  3. பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும்
  4. குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு அன்னாசி பூ பிரிஞ்சி இலை போட்டு வதக்கவும்
  5. பின்பு நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்
  6. பின்பு அதனுடன் மல்லி புதினா மற்றும் மசாலாவில் ஊறிய கோழி ஆகியவற்றை போட்டு வதக்கவும்
  7. அவை நன்கு வதங்கியதும் உப்பு போட்டு கிளறி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
  8. தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும் பொழுது தீயை குறைத்து ஊறவைத்த பாஸ்மதி அரிசியை போடவும்
  9. ஆவி வெளியேறாதவாறு பாத்திரத்தை நன்கு மூடி குறைந்த தீயில் 15 நிமிடம் வைக்கவும்
  10. அடுப்பை அணைத்துவிட்டு அரிசி உடைந்து விடாதவாறு மெதுவாக கிளறவும்
  11. வெங்காயப் பச்சடியுடன் சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Karthika Saravanan
Oct-22-2018
Karthika Saravanan   Oct-22-2018

Super biriyani.. na senju pathen semma taste

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்