வீடு / சமையல் குறிப்பு / நெல்லை ஏர்வாடி களறி விருந்து

Photo of Nellai Eruvadi Kalari Virundhu by Fathima Sujitha at BetterButter
495
2
0.0(0)
0

நெல்லை ஏர்வாடி களறி விருந்து

Oct-01-2018
Fathima Sujitha
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

நெல்லை ஏர்வாடி களறி விருந்து செய்முறை பற்றி

எங்க ஊரில் பெரும்பாலான விஷேஷங்கள் ,பண்டிகைகள் ,திருமணங்களில் நெய்சோறு தான் செய்வார்கள் ...அதற்கு பொருத்தமாக ஆட்டுக் கறி ஆணம், கத்தரிக்காய் பருப்பு, கத்தரிக்காய் பச்சடி இவைதான் நெய் சோறுக்கான சரியான காமினேஷன்... ஏர்வாடியின் நெய் சோறைப் போலவே, அதற்காக தயாரிக்கப்படும் கறி ஆணமும், கத்தரிக்காய் பருப்பும், பச்சடியும் சுவையில் தனித்துவமிக்கது...!!

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ஆட்டுகறி ஆணம் செய்வதற்கு :
  2. ஆட்டுகறி - 1 கிலோ
  3. வெங்காயம் - 200 கிராம்
  4. தக்காளி - 200 கிராம்
  5. பச்சை மிளகாய் - 6
  6. கெட்டி தயிர் - 1 கப்
  7. இஞ்சி பூடு விழுது - 3 டீஸ்பூன்
  8. பட்டை, கிராம்பு, ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
  9. கொத்தமல்லி, புதினா - 1 கைப்பிடி
  10. வீட்டு மசாலா தூள் - 4 டீஸ்பூன்
  11. மிளகாய் தூள் -2 டீஸ்பூன்
  12. தேங்காய் - 1
  13. முந்திரி - ஒரு கைப்பிடி
  14. எண்ணெய் - தேவையான அளவு
  15. உப்பு - தேவையான அளவு
  16. கத்தரிக்காய் பருப்பு செய்வதற்கு :
  17. கத்தரிக்காய் - 1/4 கிலோ
  18. துவரம் பருப்பு - 1/4 கிலோ
  19. தக்காளி - 150
  20. வெங்காயம் - 100
  21. மிளகாய் - 5
  22. இஞ்சி பூடு விழுது - 1 டீஸ்பூன்
  23. கறிவேப்பில்லை - சிறிதளவு
  24. கடுகு - சிறிதளவு
  25. உளுந்த பருப்பு - சிறிதளவு
  26. வத்தல் - 3
  27. புளி கரைசல் - தேவையான அளவு
  28. எண்ணெய் - தேவையான அளவு
  29. உப்பு -தேவையான அளவு
  30. கத்தரிக்காய் பச்சடி செய்வதற்கு :
  31. கத்தரிக்காய் - 1/4 கிலோ
  32. தக்காளி - 1/4 கிலோ
  33. மிளகாய் - 7
  34. வெங்காயம் - 100
  35. புளி கரைசல் - தேவையான அளவு
  36. கடுகு - சிறிதளவு
  37. உளுத்தம் பருப்பு - சிறிதளவு
  38. வத்தல் - 3
  39. கறிவேப்பில்லை - சிறிதளவு
  40. எண்ணெய் - தே.அ
  41. உப்பு - தே.அ
  42. தேங்காய் துருவல் - விருப்பப்பட்டால்

வழிமுறைகள்

  1. ஆட்டுகறி ஆணம் : கறியை சுத்தம் செய்து கழுவி எடுத்து கொள்ளவும்.
  2. தேங்காய் மற்றும் முந்திரி பருப்பை விழுதாக அரைத்து கொள்ளவும்.
  3. அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  4. இஞ்சி பூடு விழுது சேர்த்து வதக்கவும்.
  5. பட்டை கிராம்பு ஏலக்காய் பொடி சேர்த்து வதக்கவும்.
  6. தக்காளி, கொத்தமல்லி புதினா, கறிவேப்பில்லை மிளகாய் சேர்தௌது வதக்கவும்.
  7. வீட்டு மசாலா தூள், மிளகாய் தூள் சேர்த்து கிளறவும்.
  8. கறியை சேர்தது ஒரு பிரடு பிரட்டி தயிர் சேர்த்து கிளறவும்.
  9. உப்பு சேர்த்து கறி மூழ்கும் அளவு தன்ணீர் ஊற்றி கொதிவரவும் மூடி போட்டு மீடியம் நெருப்பில் வேக விடவும்.
  10. அரை மணி நேரத்தில் வெந்து விடும் ...( வீட்டில் செய்தால் குக்கரில் செய்து சீக்கிரம் முடிந்து விடும், இது களறி சாப்பாடு என்பதால் பாத்திரத்தில் செய்கிறோம்)
  11. அரைத்து வைத்துள்ள தேங்காயை சேர்த்து கொதி வந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்... மூடி 10 நிமிடம் வைக்கவும்.
  12. சுவையான ஆட்டுகறி ஆணம் தயார்..!!
  13. கத்தரிக்காய் பருப்பு : குக்கரில் துவரம்பருப்பு ,மஞ்சள் தூள் பூடு நல்லெண்ணெய் சேர்த்து தேவைக்கு தண்ணீர் ஊற்றி பருப்பை அவித்து எடுத்து கொள்ள வேண்டும்.
  14. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சேர்த்து, சிறிதளவு வதக்க வெங்காயம் சேர்க்கவும்.
  15. இஞ்சி பூடு விழுது சேர்த்து வதக்கவும்.
  16. வத்தல் கறிவேப்பில்லை உளுந்த பருப்பு சேர்த்து வதக்கவும்.
  17. கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.
  18. கத்தரிக்காய் சேர்த்து வதக்கவும்.
  19. கத்தரிக்காய் வதங்கியதும் தக்காளி மீதமுள்ள வெங்காயம் மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  20. வதங்கியதும் புளி கரைசல் ஊற்றவும். ( புளி அதிக அளவு ஆகிவிட கூடாது) .
  21. வீட்டு மசாலா தூள் 5 டீஸ்பூன் சேர்க்கவும்.
  22. இவற்றை குக்கரில் கடைஞ்சி வைத்துள்ள பருப்பில் சேர்க்கவும்.
  23. உப்பு சேர்த்து கிறளவும்.
  24. குக்கரை மூடி 1 விசில் வந்து அடுப்பை ஆஃப் செய்யவும்.
  25. சுவையான கத்தரிக்காய் பருப்பு ரெடி...!!
  26. கத்தரிக்காய் பச்சடி : கத்தரிக்காய், தக்காளி, வெங்காயம், மிளகாய் இவற்றை குக்கரில் போட்டு சிறிதளவு தண்ணீரை தெளிச்சி வேக வைக்கவும். ( மசிக்கிற அளவு வேக வைக்க தான் தண்ணீர் தெளிக்க வேண்டும், தக்காளி வெங்காய தண்ணிலே வெந்து விடும் என்பதால் அதிக தண்ணீர் ஊற்றி விட வேண்டாம் ..)
  27. வேக வைத்த கத்தரிக்காயை மசித்து அதில் புளி கரைசல் ஊற்றி கலந்து கொள்ளவும்.
  28. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்த பருப்பு, கறிவேப்பில்லை, வத்தல் சேர்த்து வதக்கவும்.
  29. இந்த Stage ல் தேங்காய் வேண்டும் என்றால் சேர்த்து வதக்கி கொள்ளலாம்.
  30. கலந்து வைத்துள்ள கத்தரிக்காய் கலவையை இதில் ஊற்றி கிளறவும்.
  31. பச்சடி பதத்திற்கு வந்ததும் அடுப்பை ஆஃப் செய்யவும்.
  32. அருமையான கத்தரிக்காய் பச்சடி தயார் ...!!!
  33. எங்க ஊர் நெல்லை ஏர்வாடியின் களறி விருந்து தயார் ...!!!

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்